PUBG காதல்... பாகிஸ்தானின் சீமா ஹைதர் இந்தியா வந்ததன் நோக்கம் அம்பலம்!
சச்சினை திருமணம் செய்து கொண்டு இந்து மதத்திற்கு மாறிய சீமாவால், பாகிஸ்தானில் இதை விட வேறு எந்த பெரிய பிரச்சினையும் இல்லை என்பது போல் பரபரப்பாக உள்ளது.
சீமா ஹைதர் காதல் விவகாரம்: சீமா ஹைதர் தொடர்பாக பாகிஸ்தான் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சச்சினை திருமணம் செய்து கொண்டு இந்து மதத்திற்கு மாறிய சீமாவால் பாகிஸ்தானில் இதை விட வேறு எந்த பெரிய பிரச்சினையும் இல்லை என்பது போல் பரபரப்பாக உள்ளது. இதற்கிடையில், சீமா ஹைதர் தொடர்பாக பாகிஸ்தானின் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பல்வேறு கூற்றுக்கள் கூறப்படுகின்றன. அவர், பாகிஸ்தானில் உள்ள வீட்டை விற்றதாகவும், இந்தியாவிற்கு வந்த முறை குறித்த கூறிய தகவல்களை நிரூபிக்க சரியான ஆவணம் எதுவும் சமர்பிக்கவில்லை. எனவே சிலர் அவரை பாகிஸ்தான் ஏஜென்ட் என்றும் உளவு தகவல் திரட்ட வந்தவர் என்றும் சந்தேகின்றனர்.
நான்கு குழந்தைகளின் தாயான சீமா ஹைதர் மற்றும் சச்சின் திருமணத்திற்குப் பிறகு, சீமாவின் கணவர் குலாம் இந்த பப்ஜி காதல் கதையில் நுழைகிறார். குலாம் தற்போது சவுதிக்கு சென்று தொழில் செய்து பணம் சம்பாதித்து வரும் நிலையில், சீமாவை தான் மிகவும் விரும்புவதாக குலாம் கூறுகிறார். சீமா பாகிஸ்தான் திரும்பி வந்தால், அவளது உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவளது உயிரை பாதுகாக்க தான் அவளை சவுதிக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறுகிறார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர், தனது காதலர் சச்சினுடன் இருக்க நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த பெண், இந்திய சட்டத்தின்படி "சட்டவிரோதமாக குடியேறியவர்". அவர் ஜூலை 4 அன்று சச்சின் மற்றும் அவரது தந்தையுடன் கைது செய்யப்பட்டார் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 120B (குற்றச் சதி) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். ஜாமீனில் வெளிவந்து தற்போது இந்தியாவில் தனது காதலுடன் சேர்ந்து வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். சச்சினின் வீட்டை தனது வீடு என்று குறிப்பிடுகிறார். இருப்பினும், சீமாவுக்கு எதிரான சட்ட சிக்கலகள் அவர் எதிர்காலத்தை குறித்த பல கேள்விகளை வெளிப்படுத்துகின்றன.
மேலும் படிக்க | எல்லை தாண்டிய PUBG காதல்... இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்...!
இந்நிலையில், ‘சீமா ஹைதர் திரும்பவில்லை என்றால்’ மும்பை 26/11 sஅம்பவத்தை மீண்டும் சந்திக்க வேண்டியிருக்கும் என பாகிஸ்தானில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத உருது பேசும் அழைப்பாளரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில், அந்த நபர் 26/11 போன்ற பயங்கரவாத தாக்குதல் இந்தியாவில் நடத்தப்படும் என காவல்துறையை எச்சரித்தார். தனது காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், தனது நாட்டிற்கு திரும்பவில்லை என்றால், இந்தியா "அழிவை சந்திக்கும்" என்று அழைப்பு விடுத்தவர் கூறினார்.
சீமா ஹைதருக்கு எதிரான சட்ட சிக்கல்கள்
இந்திய சட்டத்தின் பார்வையில் சீமா ஹைதர் ஒரு 'சட்டவிரோத குடியேற்றக்காரர்'. ஒரு சட்டவிரோத குடியேற்றக்காரர் என்பது ஒரு வெளிநாட்டவர், அவர் பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் நுழைகிறார், அல்லது செல்லுபடியாகும் ஆவணங்களுடன் நாட்டிற்குள் நுழைகிறார், ஆனால் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு அப்பால் தங்குகிறார். சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் இந்திய குடியுரிமை பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
சீமா ஹைதர் பாகிஸ்தான் திரும்புவாரா?
உத்திர பிரதேசத்தை செர்ந்த சச்சின் என்ற நபர் தனக்கும் PUBG மூலம் சீமாவுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறுகிறார். இருவரும் இரண்டு வருடங்களாக ஒருவரை ஒருவர் அறிந்திருந்தார்கள். மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறினார். ஆனால் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்ததில் சீமாவுக்கு ஒரு தனி நோக்கம் உள்ளது என்கிறார் இந்த பாகிஸ்தான் இளைஞர். நோக்கம் நிறைவேறிய பின் சீமா பாகிஸ்தான் திரும்புவார் என்கிறார் அவர். சீமா ஹைதர் கிரிக்கெட்டின் தீவிர ரசிகை என்று இந்த பாகிஸ்தான் இளைஞர் கூறினார். அவர் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியைப் பார்க்க விரும்புகிறார், அதைப் பார்த்த பிறகு அவர் தனது கணவர் குலாம் ஹைதரிடம் திரும்புவார் என்கிறார். சீமா காதல் விவகாரம் தொடர்காக நாளுக்கு நாள், திருக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ