'பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்' விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் நவாஜோத் சிங் சித்து ZEE News-க்கு ரூ.1000 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என வழக்கு....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்களுக்கான பிரச்சாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் நவாஜோத் சிங் சித்து தீவிரமாக ஈடுப்பட்டார். அப்போது பிரச்சாரத்தில் அவர் உரையாற்றிய போது இந்தியாவிற்கு எதிராக "பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்" என்னும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. சமீபத்தில், இந்த விவகாரம் ஊடகங்களுக்கு பெரும் விவாதமாக மாறியது. 


இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் இந்த வீடியோவானது ZEE News-ஆல் சித்தரிக்கப்பட்டவை, போலி வீடியோ என பொய் குற்றச்சாட்டினை முன்வைத்தது. இவ்விவகாரத்தில் சித்து ஒரு படி மேலாக, ZEE News மீது அவதூறு வழக்கு தொடுக்கவுள்ளதாகவும் எச்சரித்தார். 


இந்நிலையில், இந்த குற்றச்சாட்டினை குறித்து களையவும், உண்மையினை வெளிக்கொனரவும் ZEE News, சித்துவின் அல்வார் பேரணியில் கலந்து கொண்ட பொது மக்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் தொடர்பு கொண்டது. குறிப்பிட்ட பேரணியின் போது பத்திரிக்கையாளர்களால் பதிவு செய்யப்பட்ட 7 வெவ்வேறு வீடியோக்களை ZEE News பெற்று ஆய்வு நடத்தியது. ஆய்வில் காங்கிரஸின் குற்றச்சாட்டு பொய் என வெளியானது.


இதையடுத்து, 'பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்' விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் நவாஜோத் சிங் சித்து மற்றும் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் மீது ZEE News, தேர்தல் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தது. தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் கட்சியின் மூத்த தலைவர் கரண் சிங் யாதவ் ஆகியோரது பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளது. தேசத்திற்கு எதிராக முழக்கங்களை பிரச்சார கூட்டத்தில் எழுப்பியதற்கு; எதிர்ப்பு தெரிவிக்காமல் கட்சி கூட்டத்தினை நடத்தி, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் தலைவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


இதை தொடர்ந்து, தற்போது ZEE மீடியாவுக்கு எதிரான அவதூறு மற்றும் தவறான குற்றச்சாட்டுக்களை கூறியதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் நவாஜோத் சிங் சித்து ரூ.1000 கோடி நஷ்டஈடு வழங்குமாறு ZEE மீடியா சுதிர் சௌத்ரி மன நஷ்ட வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும், நவாஜோத் சிங் சித்து மன்னிப்புக் கேட்காவிட்டால், இந்த வழக்குகளை அதன் தர்க்கரீதியான முடிவிற்கு எடுக்கும்படி எல்லா சட்டப்பூர்வ ஆதாரங்களையும் பயன்படுத்துவோம் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.