பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் சிறுமி இரு நாடுகளையும் இணைக்கும் அமைதிப் பாலத்தை உருவாக்குவோம் என அந்த சிறுமி கடிதத்தின் மூலம் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

5-ம் வகுப்பு படித்து வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த அகீதத் நவீத் என்ற சிறுமி கடிதம் வாயிலாக இந்திய பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியதாவது:- 


மக்களின் இதயத்தை வெல்வது என்பது மிகப்பெரிய விஷயம் என என் அப்பா என்னிடம் கூறியுள்ளார். அதே நேரத்தில் நீங்கள் மக்களின் இதயத்தை வென்றுள்ளீர்கள். அதனால்தான் உத்தரபிரதேச தேர்தலில் வெற்றி பெற்றுள்ளீர்கள். ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள பலரின் இதயத்தை நீங்கள் வெல்ல வேண்டும் என்றால், நட்பு மற்றும் அமைதிக்கான செயல்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையேயும் நல்ல நட்புறவு தேவை. இரு நாட்டு மக்களும் நல்ல நட்புறவையே விரும்புகின்றனர். இரு நாடுகளுக்கு இடையேயான நட்பு பாலத்தை அமைப்போம். துப்பாக்கி மற்றும் குண்டுகள் வாங்குவதை விட நாம் இணைந்து புத்தகங்கள் வாங்குவோம். ஏழைகளுக்கு மருந்து வாங்குவோம். துப்பாக்கிகள் வேண்டாம் என அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். 


இந்த சிறுமி, இதற்கு முன்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.