புனித நகரமான ஹரித்வாரைப் பார்வையிட பாகிஸ்தானில் இருந்து 50 இந்து குடும்பங்கள் அடங்கிய குழு திங்களன்று வாகா-அத்தாரி எல்லை வழியாக இந்தியா வந்து சேர்ந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

25 நாள் சுற்றுலா விசாவில் வந்த இந்த பயணிகளில் பலர் இந்தியாவில் குடியேற விரும்புவதாக ANI இடம் தெரிவித்தனர். மேலும் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கும் அவர்கள் பாகிஸ்தானை அவதூறாக பேசினர்.


"ஹரித்வாரில் புனித நீராடிய பிறகு, எனது எதிர்காலம் குறித்து நான் சிந்திப்பேன். இருப்பினும், நான் இந்தியாவில் தங்க விரும்புகிறேன்" என்று பாகிஸ்தானிய இந்து லக்ஷ்மன் தாஸ் குறிப்பிட்டுள்ளார். 


குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக பரவலான போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் இந்த விஜயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் நாடு முழுவதும் இத்தகைய வழக்கம் பெறுகி வருகிறது.


நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தினை கொண்டு வந்தது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் மதத் துன்புறுத்தல்களில் இருந்து தப்பித்து, 2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள், பௌத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்த சட்டம் குடியுரிமை அளிக்கிறது. இந்நிலையில் சமீபகாலமாக இந்தியாவிற்குள் தஞ்சம் அடையும் இந்து குடும்பங்கள் அதிகரித்து வருகிறது எனலாம்.


முன்னதாக ஒரு பாகிஸ்தானிய இந்து பெண் ஒருவர், அவர்களது குடும்பத்தினர் தங்களுடைய உடைமைகள் அனைத்தையும் எடுத்துச் சென்று, குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் அவர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.