நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 72-வது கூட்டத்தில் இந்தியாவின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையினில் பாகிஸ்தான் தூதர் மல்லிகா லோகி வெளியிட்ட புகைப்படம் தவறானது என தகவள்கள் வெளியாகி வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக ஐ.நா. பொதுச் சபையில் வியாழக்கிழமை அன்று பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸி உரை நிகழ்த்துகையில் இந்தியா மீது பல்வேறு குற்றம் சாட்டினார்.


இதற்கு பதிலளிக்கும் வகையினில் இந்தியா தரப்பினில், பாக்கிஸ்தானை இனி ’டெரரிஸ்தான்’ என அழைக்கலாம் என ஐநா சபையினில் பதிலடி கொடுக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு நேற்று ஐ.நா.சபையில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை என பதிலடி கொடுத்தார்.


 


சுஷ்மாவின் உரைக்கு பதிலளித்து பேசிய ஐ.நா.விற்கான பாகிஸ்தான் நாட்டு தூதர் மல்லிகா லோகி, இன்று ’இந்தியா பயங்கரவாதத்தின் தாயகம்’ எனவும் இது தான் இந்தியாவின் உன்மை முகம் என ஒரு புகைப்படத்தினையும் வெளிப்படுத்தினார். இப்புகைப்படத்தினில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் ஒருவரின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. மேலும் அந்த பெண் காஷ்மிரைச் சேர்ந்தவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.


 



 


ஆனால் இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் காஷ்மிரை சேர்ந்தவர் இல்லை எனவும். அவர் 2014-ம் ஆண்டு இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் காயம் அடைந்த ’ராவ்யா அபு ஜோம்’, மேலும் இந்த புகைப்படமானது விருதுப் பெற்ற புகைப்பட கலைஞர் லெவினால் எடுக்கப்பட்டது எனவும் தகவல்கள் இணையத்தில் வைரலாக வெளாயாகி வருகிறது.


"பாவம் அவரே கன்ப்யூஸ் ஆயிடாரு போல!"