பயங்கரவாத பிரச்னையில் பல்வேறு உலக தளங்களில் பாகிஸ்தானை தனிமைப்படுத்திய திறமையான ராஜதந்திரம் பிரதமரையே சேரும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் மரபு ரீதியிலான போரில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்துள்ள பாக்., இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகள் மூலம் மறைமுக போரில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடுமையாகபாகிஸ்தானை சாடியுள்ளார். 


புனேவில் நடைபெற்று வரும் தேசிய பாதுகாப்பு அகாடமியின் 137 வது பாஸிங் அவுட் அணிவகுப்பு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்; பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மூலம் மறைமுகப்போரில் ஈடுபட்டுள்ளது. ஆனால், மறைமுகப்போரில் கூட பாகிஸ்தானால் வெல்ல முடியவில்லை. பாகிஸ்தான் தேர்வு செய்துள்ள மறைமுக போர் என்ற பாதை, அதனையே வீழ்த்தப்போகிறது. சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டதற்கு பிரதமரின் திறமையான ராஜதந்திரமே காரணம்” என அவர் குறிப்பிட்டார். 


இதை தொடர்ந்து அவர் மேலும் கூறுகையில்; எந்தவொரு வழக்கமான அல்லது மறைமுகமான போரிலும் இந்தியாவுக்கு எதிராக வெல்ல முடியாது என்பதை 1948 முதல் 1965, 1971 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் நடந்த போர்கள் மூலம் பாகிஸ்தான் உணர்ந்துள்ளது என்று அமைச்சர் கூறினார். "இதனால், பயங்கரவாதத்தின் மூலம் பினாமி போரின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது, பாகிஸ்தானுக்கு தோல்வியைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது என்பதை நான் முழு பொறுப்போடு சொல்ல முடியும்" என்று ராஜ்நாத் சிங் கூறினார்.


இந்தியா எப்போதும் மற்ற நாடுகளுடன் நல்லுறவு மற்றும் நட்பு ரீதியான உறவைக் கொண்டிருந்தது. நாட்டிற்கு ஒருபோதும் பிராந்தியத்திற்கு அப்பாற்பட்ட அபிலாஷைகள் இல்லை, ஆனால் தூண்டப்பட்டால் அது யாரையும் விடாது என ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 


"நாட்டு மக்களின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஆனால், யாராவது எங்கள் மண்ணில் பயங்கரவாத முகாம்களை நடத்துகிறார்கள் அல்லது தாக்குதலில் ஈடுபட்டால், அதற்கு பொருத்தமான பதிலை எவ்வாறு வழங்குவது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்" என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.