ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் சட்டப்படு தமிழக ஆளுநர் சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.


பிபிசி தமிழுக்கு சுப்ரமணியம் சுவாமி அளித்துள்ள பேட்டி:-


தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தையும், தமிழக பொறுப்பு ஆளுநரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.


தமிழக அரசியல் சூழால் மிகவும் பரபரப்பாக உள்ளது. எல்லாமே சட்டப்படி தான் நடக்கவேண்டும். சசிகலா மீது எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. இருப்பினும் அவரின் உரிமையை சட்டப்படி பறிக்க முடியாது. சசிகலா தான் முதல்வராக வேண்டும். சென்னையில் இருக்க வேண்டிய நேரத்தில் இல்லாமல் தமிழக பொறுப்பு ஆளுநர் தவறிழைத்துள்ளார்.


நிர்பந்தத்தால் பதவியை ராஜினாமா செய்தேன் என ஓ. பன்னீர்செல்வம் கூறியிருப்பது அவர் ஒரு பயந்தாங்கொள்ளியாக தான் காட்டுகிறது. அவருக்கு முதல்வராகும் தகுதி கிடையாது. அந்தஸ்தும் கிடையாது.


மேலும் எஎன்ஐ இடம் கொடுத்த பேட்டியில்:-


சசிகலா எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் தகவலை கொடுத்தார் அனால் ஓ. பன்னீர்செல்வம் கொடுக்க வில்லை. சசிகலாவுடன் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அதிகம் உள்ளது. இவை அனைத்தும் தெரிந்துக்கொண்டும் ஆளுநர் எதற்கு காத்திருக்கிறார்?. 


இவ்வாறு பேட்டி அளித்தார்