தொழில் நுட்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் ஆனால் அதை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாணவ, மாணவிகள் தேர்வு எழுதும்போது சந்திக்கும் பிரச்சனைகளை களையவும், அவர்கள் வளர்ச்சியை முன்னிறுத்தியும் எக்ஸாம் வாரியர்ஸ் என்ற புத்தகத்தை கடந்த ஆண்டு பிரதமர் மோடி வெளியிட்டார். இதையடுத்து,  தற்போது பரிக்சா பி சர்ச்சா 2 பாய்ண்ட் ஓ (Parksha pe charcha 2.0) என்ற நிகழ்ச்சி ஒன்றை டெல்லியில் மாணவர்களுக்காக நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 


மேலும், நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளின் ஓவியங்களை பார்வையிட்ட பிரதமர் மோடி, பின்னர் அவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், 
எதிர்கால இந்தியா என கருதப்படும் மாணவர்கள் முன் நின்று நான் பேசுகிறேன். இங்கு நான் உத்தரவிட வரவில்லை. கலந்துரையாடவே வந்துள்ளேன். எதிர்கால இந்தியாவே என் முன் உள்ளது. தேர்வு என்பது நம்மை செம்மைபடுத்திக்கொள்ளவும் ,வளர்க்கவும் உதவும். தேர்வை காட்டிலும், வாழ்க்கை முக்கியமானது. பள்ளி தேர்வுகள் என்பது பெரிய சவால் அல்ல. தேர்வை, செய் அல்லது செத்துமடி என கருத வேண்டாம். வாழ்க்கை முழுவதும் சவால் நிறைந்ததாக இருக்க வேண்டும். தேர்வின் தோல்வியை வாழ்க்கையின் முடிவாக கருத வேண்டாம் என தெரிவித்தார். 


மேலும், பெற்றோர் தங்களால் நிறைவேற்ற முடியாத கனவுகளை தங்களது குழந்தைகளிடம் எதிர்பார்க்கக் கூடாது என வலியுறுத்தினார். மேலும், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற, திறமைகளை நிரூபிக்க வேண்டும் என்றும் மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். தரக்கூடாது. மதிப்பெண் பட்டியலை, விசிட்டிங் கார்டாக பார்க்க வேண்டாம். தங்களது குழந்தைகளின் தேர்வு முடிவுகளை மற்ற குழந்தைகளுடன் பெற்றோர் ஒப்பிட கூடாது. குழந்தைகளை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். குழந்தைகள், பெற்றோரை நண்பர்களாக கருத வேண்டும். தேர்வானது ஒரு வாய்ப்பு. இதற்காக வாழ்க்கையை இழக்கக்கூடாது. 



தொழில்நுட்பத்தில் நன்மையும், தீமையும் உள்ளது. அதனை, நாம் அறிவை மேம்படுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும். தங்களது குழந்தைகள் தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.நமது வளர்ச்சிக்கு மட்டுமே தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.  வெளியில் சென்று விளையாடுவதை நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாற்ற வேண்டும். உங்களது இலக்கு பெரிதாக இருக்கும் போது தான் வெற்றி பெற முடியும். எளிதான இலக்குகளை மாணவர்கள் தங்களுக்குள் நிர்ணயித்து கொள்ளக்கூடாது. குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் . கடினமான நேரங்களே, நம்மையும், நமது திறமையையும் புரிய வைக்கும் . நமது ஆர்வம் எங்கு உள்ளது என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தங்களது இலக்குகள் நிறைவேறுவது நோக்கி உழைக்க வேண்டும் என பிரதமர் மோடி மாணவர்களிடையே பேசினார்.