இதுதான் எனது கடைசி ஒலிம்பிக் போட்டி - வினேஷ் போகத் சொன்ன முக்கிய தகவல்!
Vinesh Phogat: ஒலிம்பிக் போட்டிகளின் இறுதி போட்டிக்கு நுழைந்த இந்தியாவின் முதல் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் வினேஷ் போகத்.
Vinesh Phogat: தற்போது நடைபெற்று வரும் பாரிஸ் ஒலிம்பிக் 2024ல், வினேஷ் போகத் 50 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைப்படைத்துள்ளார். இரண்டு உலக சாம்பியன்ஷிப்கள், மூன்று CWG மற்றும் எட்டு ஆசிய சாம்பியன்ஷிப் பதக்கங்களை பெற்று இந்தியாவிலிருந்து மிகவும் வெற்றிகரமான மல்யுத்த வீராங்கனையாக உள்ளார். அவர் இதுவரை ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவில்லை என்றாலும், மற்ற போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். இந்த முறை பதக்கத்தை வெல்ல தன்னால் முடிந்ததை கடுமையாக செய்து வருகிறார். பாரிஸ் ஒலிம்பிக்கில், வினேஷ் போகத், தனது முதல் போட்டியில் உலகின் சிறந்த மல்யுத்த வீராங்கனை, 2020 டோக்கியோவின் தங்கப் பதக்கம் வென்ற மற்றும் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான யுய் சுசாகியை எதிர்த்துப் போட்டியிட்டார்.
மேலும் படிக்க | 4 முறை உலக சாம்பியன், ஒலிம்பிக் வின்னர் சுசாகியை வீழ்த்திய வினேஷ் போகத்..!
இதுவரை தோல்வியே சந்திக்காத யுய் சுசாகியை இறுதி வினாடியில் வீழ்த்தி புதிய வரலாற்றை உருவாக்கி காலிறுதிக்கு முன்னேறினார் வினேஷ் போகத். பின்னர், காலிறுதியில் முன்னாள் ஐரோப்பிய சாம்பியனான உக்ரைன் நாட்டு வீராங்கனை ஒக்ஸானா லிவாச்சை 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். பின்னர் அரையிறுதியில் கியூபாவின் பான் அமெரிக்கன் கேம்ஸ் சாம்பியனான யூஸ்னிலிஸ் குஸ்மானை 5க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இன்று நடைபெறும் இறுதி போட்டியில் வினேஷ் போகத், அமெரிக்க வீராங்கனையான சாரா ஆன் ஹில்டெப்ராண்டை எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெரும் பட்சத்தில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை மற்றும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை போகத் பெறுவார்.
வினேஷ் போகத் கடந்து வந்த பாதை
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ விளையாட்டு போட்டியில் 53 கிலோ பிரிவில் காலிறுதி போட்டியில் வினேஷ் போகத் தோல்வியை சந்தித்தார். இந்த மோசமான தோல்வி அவரை பெரிதும் பாதித்தது. மேலும், அவர் தவறான நடத்தைக்காக குற்றம் சாட்டப்பட்டு, விதி மீறல்களுக்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்பால் இடைநீக்கமும் செய்யப்பட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் நடைபெற்ற சில மோசமான சம்பவங்களால் வினேஷ் போகத் மல்யுத்தத்தை விட்டு கூட விலக விரும்பினார். அதன் பிறகு, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டினார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் உள்ளது. இது போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த வினேஷ் போகத் தங்க பதக்கம் வெல்ல வேண்டும் என்று பலரும் கனவோடு உள்ளனர்.
மேலும் படிக்க | IND vs SL: 27 ஆண்டு வரலாற்றை காப்பாற்ற இந்தியா எடுத்துள்ள அதிரடி முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ