நாடாளுமன்றத்தில் 2018-19 ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்!
2019-20 கால ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7% ஆக இருக்கும்..
கடந்த நிதியாண்டில் நிதிப்பாற்றக்குறை 5.8% உள்ளது. மாநிலங்களவையில் தாக்கலான பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்..
2019-20 கால ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7% ஆக இருக்கும்..
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து 2018 - 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக இன்று பொருளாதார ஆய்வறிக்கையை தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியம் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யவுள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்தும், துறைகளின் மேம்பாடுக்கான நிதி ஒதுக்குவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வு அறிக்கையை பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முந்தைய நாளில் தாக்கல் செய்யப்படும். பொருளாதார ஆய்வறிக்கையின் அடிப்படையிலேயே வரும் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி, கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகள் நிர்ணயம் செய்யப்படும். கடந்தமுறை பாஜக ஆட்சியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் பொருளாதார அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து இந்த பொருளாதார அறிக்கையின் அடிப்படையில் 2018 - 2019 ஆம் ஆண்டின் வளர்ச்சி இலக்கு கணிக்கப்படும்.