தேர்தல் வியூகம் 2024: உத்திர பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று அகிலேஷ் யாதவ் அறிவித்து காங்கிரஸ் கட்சிக்கு டென்ஷன் ஏற்படுத்திய அகிலேஷ் யாதவ், தற்போது பாரதிய ஜனதா கட்சிக்கும் வேறுவிதமான இக்கட்டை ஏற்படுத்தியிருக்கிறார். பாஜகவின் பதற்றத்தை அதிகரிக்கும் விதமாக சமாஜ்வாதி கட்சி  50% க்கும் அதிகமான வாய்ப்புகளை ஓபிசி பிரிவு வேட்பாளர்களுக்கு வழங்குகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் கோரிக்கை


இதற்கிடையில், 2009 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்களுக்கு சமமான இடங்களையாவது அளிக்க வேண்டும் என்று உத்திர பிரதேச மாநில காங்கிரஸ் கோரியுள்ளது. இதற்கிடையில் எந்தக் கட்சியுடனும் தேர்தல் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என மாயாவதி அறிவித்துவிட்டார்.


ஓபிசி வாக்கு வங்கி


பிரதமரே ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் என்ற நிலையில், ஓபிசி பிரிவின வாக்காளர்கள் இந்தியாவில் அதிகமாக இருக்கும் நிலையில், காங்கிரஸ் சகாக்கள் அந்தப் பிரிவினரைக் கண்டுகொள்ளாதது ஆச்சரியமாக இருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஓபிசி வாக்காளர்களை கவர பாஜக மும்முரமாக உள்ளது.


அரசியலில் உயர்பதவி


ஓபிசிக்கள் அரசில் உயர் பதவி வகிப்பவர்கள் என்ற விஷயத்தை தனது நீண்ட யாத்திரையின் போது மக்களிடம் தொடர்ந்து கூறிவரும் ராகுல் காந்தியின் ஓபிசி மீதான காதல் ஒருபுறம் என்றால், தற்போது சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியலைப் பார்த்தால், அதன் இலக்கு என்ன என்பதும் தெளிவாக புரிகிறது.


மேலும் படிக்க | தொகுதிப் பங்கீடு இறுதி செய்தால் மட்டுமே நீதி பயணத்தில் பங்கேற்போம் -அகிலேஷ் யாதவ்


தேர்தலில் ஓபிசி கார்டு


தேர்தலில் ஓபிசி கார்டு விளையாடும் சாமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ்பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் சிறுபான்மையினர் ஃபார்முலா பற்றி பேசி வந்தாலும், வேட்பாளர் பட்டியலைப் பார்த்தால், அவரது முழு கவனமும் ஓபிசி வாக்குகள் மீதுதான் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


ஓபிசி பிரிவின வாக்குகள் என்பது பாஜகவின் மிகப்பெரிய வாக்கு வங்கி ஆகும். தாக்கூர், தலித் மற்றும் முஸ்லீம் வேட்பாளர்களைத் தவிர, ஜாட், மவுரியா, படேல் மற்றும் வர்மா ஆகியோருக்கும் அகிலேஷ் யாதவ் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கிறார். தற்போது 27 தொகுதிகளுக்கு மட்டுமே அவர் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்துள்ளார் 
 
15 ஓபிசி வேட்பாளர்கள் 


இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்தம் 27 வேட்பாளர்களில் மொத்தம் 15 பேர் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், அகிலேஷ் யாதவ், யாதவராயிற்றே, அவர் ஏன் இப்படி? என்ற கேள்விகளும் எழுகின்றன.


யாதவ வாக்கு வங்கி


யாதவர்களுடன் மட்டுமே தொடர்புடையவராக கருதப்பட்ட சமாஜ்வாதி கட்சியின் சகாத்தமும் இருந்தது. அது SP-BSP சகாப்தம். தற்போது, பிஜேபி ஓபிசிகளில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை குறிவைக்கும்போது, ​​உத்தரப்பிரதேச மாநிலத்தில் யாதவர்களுடன், பெருமளவிலான ஓபிசிகளையும் தன்னுடன் இணைக்குக்ம் முயற்சியை கட்சித் தொடங்கியுள்ளது. 24 ஆண்டுகளுக்கு முந்தைய அறிக்கையின்படி, உத்தரப்பிரதேசத்தில் ஓபிசி மக்கள் தொகை 54 சதவீதம் என்ற நிலையில் தற்போது அது மேலும் அதிகரித்திருக்கும். 


பாஜகவின் ஓபிசி வியூகம்


பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதுமே, அது ஓபிசியினரை குறிவைக்கும் பாஜகவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று பேசப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் பாரத ரத்னா விருது அறிவிப்பின் தாக்கம் நிச்சயம் இருக்கும். ஏனென்றால் கர்பூரி தாக்கூரைப் பற்றி குறிப்பிட்ட மோடி, மிகவும் பின்தங்கிய OBC சமூகத்தைச் சேர்ந்த அந்த பெரிய மனிதர் எப்படி நடத்தப்பட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றார். பிரதமர் மோடியும் ஓபிசி சமூகத்தினர் என்பது இந்த இடத்தில் நினைவுகூர்வது உசிதமானதாக இருக்கும்.


மேலும் படிக்க - INDIA Alliance: 9 மாநிலங்களில் கூட்டணி, 290 இடங்களில் போட்டியிட காங்கிரஸ் முடிவு எனத் தகவல்


ஓபிசி வாக்களர்களை மையப்படுத்தும் தேர்தல்


தேர்தல்கள் ஏன் ஓபிசி வாக்காளர்களை மையமாகக் கொண்டதாகத் தெரிகிறது, ஓபிசி (OBC) சமூகம் நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 52 சதவிகிதம் இருக்கும் நிலையில், இந்த வாக்கு வங்கி எந்த பக்கம் சாய்ந்தாலும் அந்தக் கூட்டணிக்கு வெற்றி நிச்சயம். ஓபிசியில் தேர்தலில் தாக்கம் இரு வகையில் ஏற்படும். வளமான மற்றும் பிரதிநிதித்துவம் பெற்று பல கட்சிகளில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினரின் தாக்கம் ஒருபுறம் என்றால், அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத மற்றும் மிகவும் பின்தங்கிய பிரிவினர் மறுபுறம் என்று சொல்லலாம்.


பாஜக இரண்டாவது பிரிவான பின்தங்கிய மக்கள் மீது அதிக கவனம் செலுத்துகிறது. கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும், பின்தங்கிய ஓபிசி சாதி வாக்காளர்கள், பாரதிய ஜனதா கட்சியால் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்பதும், அதற்கு முன்பு ஓபிசிக்கள் காங்கிரஸ் மற்றும் பிராந்திய கட்சிகளுக்கு மட்டுமே வாக்களித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மண்டல் கமிஷன்


மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்திய பிறகு நாட்டில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு ஓபிசி இடஒதுக்கீடு மற்றும் இதர வசதிகளின் பலன்கள் கிடைக்கவில்லை என்று பாஜக உரக்கக் கூறியுள்ளது. அந்த வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதித்துவத்தை உணரும் வகையில் பிரதமர் பேரணிகளில் சாதிகளின் பெயர்களையும் எடுத்து வருகிறார். இந்த நிலையில் ஓபிசி வாக்கு வங்கியின் பயனை பாஜகவிடம் இருந்து ஈர்க்கும் முயற்சியில் சமாஜ்வாதி கட்சி முடிவு செய்துவிட்டது என்பது, அகிலேஷ் யாதவ்வின் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் உணர்த்துகின்றன.


மேலும் படிக்க | Aging Population: சீனியர் சிட்டிசன்களுக்கு இவையெல்லாம் காலத்தின் கட்டாயம்! நிதி ஆயோக் பரிந்துரை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ