இந்திய வெளியுறவுத்துறை பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதிப்பக்கம் இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை வழங்குவது, பாஸ்போர்ட்டின் நிறத்தை ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றுவது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவித்து வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2012-ம் ஆண்டுக்கு பின்னர் வெளியிடப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் தகவல்கள் அரசு கணினி தகவல் தரவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது, எனவே சோதனையின் போது ‘பார்கோர்டை ஸ்கேன்’ செய்கையில் எளிதாக விபரங்களை தெரிந்துக் கொள்ள முடியும். 


மக்களின் விபரங்களை பாதுகாக்கும் முயற்சியாக வெளியுறவுத்துறை பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதி பக்கத்தை நீக்கலாம் என செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.“பாஸ்போர்ட்டின் இறுதி பக்கத்தை வேருமனையாக விட்டுவிட முடிவு செய்துள்ளது. 


குடிமக்களின் விபரங்களை பாதுகாக்கவே இந்த முயற்சி,” என  குறிப்பிடப்பட்டு உள்ளதாக வெளியுறவுத்துறையின் பாஸ்போர்ட்டு மற்றும் விசா பிரிவு கொள்கை மற்றும் சட்ட விவகாரங்கள் துறை துணை செயலாளர் சுரேந்தர் குமார் தெரிவித்துள்ளார். 


இதையடுத்து, தற்போது நீல நிறத்தில் உள்ள பாஸ்போர்ட்டு வழங்கப்பட்டு வருகிறது, பாஸ்போர்ட்டு நிறத்தை ஆரஞ்சு நிறமாக மாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.