போலி ரூ. 500 நோட்டை கொடுத்து வைத்தியம் பார்த்த நோயாளி... மருத்துவரே பகிர்ந்த காமெடி பதிவு!
Fake 500 Rupees Note: ஒரு நோயாளி போலியான 500 ரூபாய் நோட்டை கொடுத்து, மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற்று சென்ற சம்பவத்தை அந்த மருத்துவரே பகிரந்துள்ளார்.
Fake 500 Rupees Note: PayTM, Gpay மற்றும் PhonePe போன்ற செயலிகள் தற்போது மக்களின் பயன்பாட்டுக்கு வந்ததில் இருந்து, அவர்களில் பெரும்பாலோர் கையில் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பதே இல்லை. அதற்கு ஈடாக மாற்றத்தைப் பெறுவதற்கும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த விரும்புகிறார்கள். இருப்பினும், சில நேரங்களில், மக்கள் பணத்தையும் பயன்படுத்துகிறார்கள்.
இதுபோன்ற ஒரு சம்பவத்தில், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கும் ஒருவர் தனது நோயாளிகளில் ஒருவரால் அவர் எப்படி அவரை ஏமாற்றினார் மற்றும் அது எப்படி அவருக்கு வேடிக்கையான நினைவகமாக மாறியது என்பதை சமீபத்தில் சமூக வலைதளம் மூலம் வெளிப்படுத்தினார்.
எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் மனன் வோரா, உடல்நலம் தொடர்பான விஷயங்களை சமூக வலைதளங்களில் பகிரும் கண்டென்ட் கிரியேட்டராகவும் இருக்கிறார், மெட்டாவின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சமூக ஊடகத் தளமான Threads-க்கு சென்று இதுகுறித்த செய்தியை பகிர்ந்து கொண்டார்.
மேலும் படிக்க | ஜாக்பாட்.. இனி பெண்களுக்கு 1000 ரூபாய் கிடைக்கும், அரசு புதிய திட்டம்
Threads-இல் ஒரு இடுகையில், "சமீபத்தில், ஒரு நோயாளி உண்மையில் இந்த நோட்டை பயன்படுத்தி என்னிடம் சிகிச்சை பெற்று பணம் செலுத்தியிருக்கிரார். எனது பணியாளரும் அதைச் சரிபார்க்கவில்லை (யாரும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்) ஆனால் அப்படி நடந்துள்ளது. ஒரு டாக்டரை ஏமாற்றினால் கூட, மக்கள் இவ்வளவு தூரத்திற்கு செல்வார்கள் என்பதை இது காட்டுகிறது" என குறிப்பிட்டார். அதாவது, அந்த 500 ரூபாய் நோட்டு போலியாகும், அதில் பள்ளி ப்ராஜக்ட்டிற்கான தயாரிப்பு என குறிப்பிடப்பட்டதையும் அவர் பகிர்ந்த புகைப்படத்தில் காணலாம்.
இந்த நோட்டை பயன்படுத்திய நோயாளிக்கு அந்த நோட்டு போலியானது தெரியாததால், அதை தான் கடந்து சென்றதாகவும் அவநம்பிக்கையில் இருப்பதாகவும் அவர் கூறினார். "அவர்களும் அதைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்று நான் நம்ப மறுக்கிறேன், மேலும் அந்த அவநம்பிக்கையுடன் அதை கடந்து சென்றேன்," என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அந்த போலி நோட்டை கொடுத்து ஏமாற்றியதை மருத்துவர் அடையாளம் கண்டுகொண்டாலும், அவர் அந்த சம்பவத்தை விளையாட்டாக எடுத்துக்கொண்டார். "உண்மையாகவே, இதனால் நான் நன்றாக சிரித்தேன், நான் ஒருவர் ஏமாற்றியிருந்தாலும், இது ஒரு வேடிக்கையான நினைவாகும். எனவே, இந்த 500 ரூபாய் நோட்டை சேமித்து வைக்கிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளத்தில் பகிரப்பட்டதில் இருந்து, அந்த பதிவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட லைக்ஸ்களும் பல கமெண்டுகளும் குவிந்து வருகின்றன. "அவர்கள் ஃபார்ஸி தொடர்களால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளனர். அந்தப் பணம் ஏன் பணமதிப்பு நீக்கம் செய்யப்படுகிறது என்பது இப்போது தெரிகிறது" என்று ஒரு பயனர் கூறினார். ஃபார்ஸி என்ற இணைய தொடர் கள்ள நோட்டு தயாரிப்பு, விநியோகம், அதன் பின்னால் இருக்கும் சர்வதேச மாஃபியா கும்பல், அரசின் தொடர் முன்னெடுப்புகள் குறித்து எடுக்கப்பட்டது. அந்த தொடரை அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
"போலிக்கும் உண்மைக்குமான வித்தியாசம் தெளிவாகத் தெரிந்தாலும் எவ்வளவு அழகாக ஏமாற்றியிருக்கிறார்கள்" என்று மேலும் ஒருவர் கூறினார். மற்றொருவர், "அந்த நபர் யாராக இருந்தாலும், அவர் ஒரு மேதையாக இருக்க வேண்டும் அல்லது புத்திசாலி என்றும் சொல்லலாம்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் தொடர்பான புதிய விதிகள்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ