பாட்னா பள்ளியில் பயிலும் 5 ஆம் வகுப்பு மாணவிக்கு கடந்த 9 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள புல்வாரி ஷெரிப் பகுதியில் இயங்கிவரும் பள்ளியில் உள்ள தலைமை எழுத்தாளர் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு கடந்த பாலியல் ஒன்பது மாதங்களாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   


இதை தொடர்ந்து இந்த வழக்கின் பேரின் காவல்துறையினர் அந்த பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியரை கைது செய்துள்ளனர். இதை தொடர்ந்து, பாலியல் வன்புணர்வுக்கு ஆளான அந்த சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


மேலும், அந்த தலைமை ஆசிரியர் அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது மட்டும் இன்றி அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இதை வெளியில் சொன்னால் அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவதாகவும் சிறுமியை அட்சுருத்தியுள்ளார். 


இதையடுத்து, அந்த சிறுமி இரண்டு மாதம் கற்பமாக இருந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தலைமையாசிரியர் மீது பாலியல் குற்றம் (POCSO) சட்டத்தின் கீழ் குழந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.