அயோத்தியில் ராம் கோயில் கட்ட ரூ.10 கோடியை வழங்குவதாக பாட்னாவின் மகாவீர் மந்திர் அறக்கட்டளை தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதற்காக பாம்னாவின் மகாவீர் கோயில் அறக்கட்டளை ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு ரூ.10 கோடி நன்கொடை அளிப்பதாக திங்கள்கிழமை அறிவித்துள்ளது. முன்னாள் IPS கிஷோர் குணால் மகாவீர் மந்திர் அறக்கட்டளை சார்பாக முதல் தவணை தொகையை ரூ.2 கோடி ரூபாயை அயோத்திக்கு எடுத்துச் சென்றுள்ளார்.  


அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பை அறிவித்த பின்னரே 10 கோடி ரூபாய் நன்கொடை வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதாக மகாவீர் மந்திர் அறக்கட்டளை செயலாளர் கிஷோர் தெரிவித்தார். வரவிருக்கும் ராம் கோயிலின் கருவறை தங்கத்தால் செய்யப்பட வேண்டும் என்று மகாவீர் அறக்கட்டளை விரும்புகிறது என்றும், அனைத்து செலவுகளையும் தாங்க மகாவீர் மந்திர் அறக்கட்டளை தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.


ஜீ நியூஸுடன் பேசிய ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் அறங்காவலர் காமேஷ்வர் சௌபால், 2022-க்குள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ராம் கோயில் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி ராம் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவார் என்று சௌபால் தெரிவித்துள்ளார். 


உச்ச நீதிமன்றம் 2019 நவம்பர் 9 ஆம் தேதி தனது தீர்ப்பில், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதி முழுவதையும் இந்து தரப்புக்கு வழங்கியது. கோயில் கட்டுவதற்கான தீர்ப்பின் மூன்று மாதங்களுக்குள் ஒரு திட்டத்தை வகுக்குமாறு அது மையத்திற்கு அறிவுறுத்தியது. இக்கோயில் கட்டுமானத்திற்காக மத்திய அரசு 67 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது குறிப்பிடதக்கது.