இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள குஜராத் மாநிலத்தில், 33 மாவட்டங்கள், 182 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலதிற்கு வருகிற டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு 2 கட்டமாக நடைபெறும். டிசம்பர் 9-ம் தேதி மற்றும் 14-ம் தேதி என வாக்குபதிவு இரண்டு கட்டமாக நடைபெறும். குஜராத் மாநிலத்தில் முதலாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடியும் கட்டத்தில் இருந்ததால், காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி தீவிர பிரசாரத்தில் இன்று ஈடுபட்டனர்.


இந்த மாதம் நடக்கும் குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது. மேலும், காங்கிரஸ் கட்சியுடன் ஹர்திக் படேலுடன் கைகோர்த்திருப்பதால் பாரதீய ஜனதா கட்சிக்கு கடும் நெருக்கடி உருவாகி உள்ளது.


இந்நிலையில் குஜராத்தில் நாளை தேர்தல் நடைபெற இருப்பதால் காங்கிரஸ் துணைத்தலைவர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.


இந்நிலையில் இன்று மாலை 5 மணியுடன் முதலாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைவதை தொடர்ந்து;- காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தாராபூரில் தனது தொண்டர்களுடன் 'பாவ் பாஜி' உணவு அருந்தி வருகிறார். இந்த வீடியோ சமுக வலை தளங்களில் பரவலாக பரவி வருகிறது . 'பாவ் பாஜி என்பது வட இந்தியாவில் பிரபலமாக கிடைக்கும் உணவு வகையாகும்.