ஜாதி ரீதியிலான ராகிங்.. தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவரின் மரணத்திற்கு காரணமான 3 மருத்துவர்கள் கைது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிராவின் ஜல்கான் பகுதியை சேர்ந்த 26 வயதான டாக்டர். பாயல் டாட்வி (Payal Tadvi) மகப்பேறு துறையில் மேற்படிப்பு மேற்கொள்ள, பி.ஒய்.எல் நாயர் மருத்துவமனையுடன் இணைக்கப்பட்ட தோபிவாலா தேசிய மருத்துவமனையில் கடந்த ஆண்டு சேர்ந்தார். கடந்த ஆண்டு மே மாதம் கல்லூரியில் சேர்ந்த அவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே சீனியர் டாக்டர்கள் தன்னை ஜாதி ரீதியில் கிண்டல் செய்து தொந்தரவு கொடுப்பதாக தனது குடும்பத்தினருடன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று பாயாலின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் டாக்டர். பாயல், கடந்த வாரம் 22 ஆம் தேதி BYL மருத்துவமனை வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை ஜாதி ரீதியில் துன்புறுத்தியதாக கருதப்படும் டாக்டர். ஹேமா அஹுஜா, டாக்டர். அன்கிதா கண்டில்வால், டாக்டர். பக்தி மேஹர ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பேசிய மருத்துவமனை டீன் டாக்டர் ரமேஷ் பர்மால் “ இந்த விவகாரத்தை விசாரிக்க ராகிங் எதிர்ப்பு கமிட்டி என்ற குழுவை நாங்கள் அமைத்துள்ளோம். குற்றம்சாட்டப்பட்ட 3 மருத்துவர்களுக்கும் நாங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம், அவர்கள் கமிட்டி முன்பு ஆஜராக கோரியுள்ளோம். ஆனால் அவர்கள் தற்போது மகாராஷ்டிராவில் இல்லை. இந்த கமிட்டி விரைவில் தனது அறிக்கையை தாக்கல் செய்யும்” என்று தெரிவித்தார்.



இதனிடையே பாயலின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றம்சாட்ட 3 மருத்துவர்களுக்கு எதிராக அக்ரிபடா காவல்நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மூன்று மருத்துவர்களான பக்தி மெஹர் மற்றும் ஹேமா அகுஜா ஆகிய இருவரை கைது செய்தனர். பக்தீவ் மெஹ்ரே, மாலையில் அமர்வு நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டார், செவ்வாய்க்கிழமை இரவு ஹேமா அஹுஜா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியான மும்பை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.