மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி நினைவஞ்சலி!
என்றென்றும் அடல்ஜி நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இன்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினோம் என உருக்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
"மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் (Atal Bihari Vajpayee) மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு டெல்லியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் "பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
தொடக்ககாலத்தில் "ஆர்.எஸ்.எஸ் (RSS) இயக்கத்தில் சேர்ந்து பிற்பாடு பாரதிய ஜனதா கட்சியை தோற்றுவித்தவர்களில் மிக முக்கியமானவர் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள்.!
வயது முதிர்வு காரணமாக வாஜ்பாய் (93) கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி காலமானார். இந்நிலையில் இன்று வாஜ்பாயின் மூன்றாவது நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி (PM Narendra Modi) மரியாதை செலுத்தினார். அவருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா போன்றோரும் கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
"இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'வாஜ்பாய் அவருடைடைய ஆளுமை மட்டும் இயற்கையை நேசிக்கும் தன்மை, நகைச்சுவையுடன் பேசும் திறமை அவர் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக ஆற்றிய பணியை நாங்கள் நினைவு கூறுகிறோம். என்றென்றும் அடல்ஜி நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இன்று அவரது நினைவு தினத்தையொட்டி"சதைவ் அடல் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினோம் என உருக்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.!
ALSO READ | இந்தியாவின் தன்னிகரற்ற தலைவன் போக்ரான் நாயகன் அடல் பிஹாரி வாஜ்பாய்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR