இஸ்ரேலின் பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus spyware) மென்பொருள் மூலம் பிரதமர் மோடி உட்பட இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகள், எதிர்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், இந்தியாவில் உள்ள பத்திரிக்கையாளர்கள், நீதிபதிகள் ஆகியோரின் செல்போன்கள் உளவு பார்க்கப் படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவர்கள் தொடர்பான ரகசியங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெகாசஸ் ஸ்பைவேர் என்பது இஸ்ரேலைச் (Israel) சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனம் (NSO Group) உளவு பார்ப்பதற்கென்றே உருவாக்கியுள்ள மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் போன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களை கண்காணித்து அதில் இருக்கக்கூடிய மெசேஜ்கள், மின்னஞ்சல்கள், தொலைபேசி உரையாடல்கள், போன்றவற்றை உளவு பார்ப்பதற்கும், உரையாடல்களை ஒட்டுக் கேட்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 


இந்த உளவு பார்க்கும் மென்பொருள் பற்றிய செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இந்தியாவைச் சேர்ந்த  முக்கிய அரசியல் தலைவர்கள், எதிர்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், நீதிபதிகள் போன்றோரின் தொலைபேசி எண்கள் கண்காணிக்கபட்டுள்ளதாக சந்தேகங்கள் எழுந்து வருகிறது. 



ALSO READ: பாராளுமன்றம் இன்று கூடுகிறது; பிரச்சினைகளுடன் காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்


இது தவிர கடந்த 2019ஆம் ஆண்டு பிகாசஸ் ஸ்பைவர் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதாக வாட்சப் (Whatsapp) நிறுவனம் என்.எஸ்.ஓ (NSO) நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.


பெகசஸ் மென்பொருள் பற்றி தெரிய வந்ததன் மூலம் உலக அளவிலான கண்காணிப்பு வளையத்தில் இருந்த திரை விலகியுள்ளது. பாரிஸை தளமாகக் கொண்ட ஊடக இலாப நோக்கற்ற நிறுவனமான ஃபார்பிட்டன் ஸ்டோரீஸ் மற்றும் அம்னஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவற்றின் கூட்டு விசாரணையைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஆர்வலர்கள் மற்றும் நீதிபதிகள் ஆகியோருக்கு சொந்தமான 50,000 தொலைபேசி எண்களைக் கொண்ட தரவுத்தளங்களின் தரவு கசிந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தி வயர் உள்ளிட்ட 17 ஊடக கூட்டாளர்களிடம் இந்த எண்களின் பட்டியல் பகிரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


விசாரணையில் கசிந்த எண்களுடன் தொடர்புடைய தொலைபேசிகளின் சிறிய தடயவியல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் 37 தொலைபேசிகளில் பெகாசஸ் ஸ்பைவேர் தக்குதல் ஏற்பட்டுள்ளது பற்று உறுதியாகியுள்ளது. இவற்றில் 10 எண்கள் இந்தியர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: பாராளுமன்றம் இன்று கூடுகிறது; பிரச்சினைகளுடன் காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR