பாராளுமன்றம் இன்று கூடுகிறது; பிரச்சினைகளுடன் காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 19, 2021, 07:29 AM IST
பாராளுமன்றம் இன்று கூடுகிறது; பிரச்சினைகளுடன் காத்திருக்கும் எதிர்க்கட்சிகள் title=

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு 3 பாராளுமன்ற கூட்டத்தொடர்கள் முன்கூட்டியே முடித்தது. மேலும் குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தபோதிலும், 5 மாநில சட்டசபை தேர்தல்களை கருத்தில் கொண்டு பாதியிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் பாராளுமன்ற மழைக்கால (Monsoon Session of Parliament) கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. மேலும் இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 13 ஆம் தேதி முடிகிறது. இந்த மழைக்காலத் கூட்டத்தொடரில் பாஜக தலைமையிலான மத்திய அரசை ஒரு கை பார்க்க காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகவும் தீவிரமாக உள்ளன. முதல் நாளான இன்று மக்களவை, மாநிலங்களவை என இரு சபைகளிலும், புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பிரதமர் மோடி (PM Modi) அறிமுகம் செய்து வைப்பார். மேலும் மக்களவை இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு வென்ற புதிய எம்.பி.க்களும் இன்று பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்வார்கள். இந்த கூட்டத்தொடரில் 29 மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ALSO READ | பிரதமர் மோடியை சந்தித்தார் ஷரத் பவார்: 50 நிமிட சந்திப்பால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

மேலும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இன்று விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, வேலையின்மை, கொரோனா தொற்றுநோய் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்கும். 

இந்த கூட்டத்தொடர் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் நடப்பதால், கொரோனா கால கட்டுப்பாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும். இரு சபைகளும் ஒரே நேரத்தில் செயல்படும். தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படும்.

ALSO READ | COVID-19: பிரதமர் மோடி மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News