ராஞ்சி: பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) ஜார்க்கண்ட் (Jharkhand) மாநிலத்தில் பல திட்டங்களைத் தொடங்கி வைத்தார், அங்கு முதலில் அவர் சட்டசபை கட்டிடத்தை திறந்து வைத்தார். இதன் பின்னர், சட்டசபை கட்டிடத்தை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் ஜார்க்கண்ட் ஆளுநர் திராவ்படி முர்மு,  அம்மாநில முதலமைச்சர் ரகுவர் தாஸ் (Raghubar Das) ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் பின்னர், ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் கூறுகையில், 'இன்று, மாநிலம் உருவாகி கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, ஜார்கண்டில் ஜனநாயகத்தின் கோயில் திறக்கப்படுகிறது. இந்த கட்டிடம் ஒரு கட்டிடம் மட்டுமல்ல. இந்த கட்டிடம் ஜார்க்கண்ட் மக்களின் பொன்னான எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்கும் ஒரு புனித இடமாகும். ஜார்க்கண்டின் தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினரின் கனவுகள் நனவாகும். மேலும், மத்தியில் ஆட்சி அமைத்து 100 நாட்களில் நாங்கள் பல திட்டங்களை கொண்டு வந்தோம் என்று பிரதமர் மோடி கூறினார். 


இந்த 100 நாட்களில் நாடு "ட்ரெய்லரைப் மட்டும் பார்த்து உள்ளது. முழு படமும் இன்னும் நிலுவையில் உள்ளது. பொதுமக்களிடம் கொள்ளையடித்த சிலர் இப்போது சரியான இடத்தை அடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.