கம்பாளா போட்டி நடத்த கர்நாடகாவில் போராட்டம்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப் படுவதைப் போல கர்நாடகாவில் கம்பாளா, ஹோரி ஹப்பா ஆகிய விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என அரசியல் கட்சியினரும், இளைஞர் அமைப்பினரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பாளா விளையாட்டு (எருமை பந்தயம்)
போட்டியை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டைப் போல கம்பாளா விளையாட்டு போட்டிகளுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
இதேபோல கம்பாளா விளையாட்டு போட்டி களையும் நடத்த கர்நாடக அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.
மேலும் கம்பாளா போட்டி ஏற் பாட்டாளர்கள், விவசாய அமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் மங்களூரு, பெங்களூரு ஆகிய இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழர்கள் ஒன்று கூடி அறவழியில் போராடி பாரம்பரிய உரிமையை மீட்டு எடுத்தது போல், கர்நாடகாவில் பாரம்பரியமாக நடத்திவரும் ’கம்பாளா’ போட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.