கோமியம் குடித்தால் தான் அனுமதி! பாஜக தலைவரின் பேச்சால் சர்ச்சை!
BJP district president of Indore: நவராத்திரியை ஒட்டி கார்பா பந்தல்களுக்குள் நுழைவதற்கு முன்பு மக்கள் கோமியம் குடிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் பசுவின் மூத்திரத்தைக் குடிப்பதை எதிர்க்க மாட்டார்கள் என்று இந்தூரில் பாஜக மாவட்ட தலைவர் தெரிவித்துள்ளார். விரைவில் நவராத்திரி என்றழைக்கப்படும் இன்று பண்டிகை நடைபெற உள்ளது. இது தொடர்பான கார்பா பந்தல்களுக்குள் நுழைவதற்கு முன்பு அனைவரும் இதை அருந்த வேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார். இந்தூரின் பாஜக மாவட்டத் தலைவர் சிந்து வர்மா பக்தர்கள் கார்பா பந்தல்களுக்குள் நுழையும் முன்பு மாட்டு மூத்திரம் குடிக்க வேண்டும் என்று சொல்லி இருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திங்களன்று, பாஜக தலைவர் சிந்து வர்மா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் மாட்டு மூத்திரத்தைக் குடிப்பதைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். "கார்பா பந்தலுக்கு செல்லும் முன்பு பக்தர்கள் மாட்டு மூத்திரத்தைக் குடிக்க வேண்டும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் நாங்கள் கேட்டு கொண்டுள்ளோம்" என்று குறிப்பிட்டார். இப்படி ஏன் செய்ய வேண்டும் என்றும், இதற்கான காரணத்தை தெரியபடுத்தவும் என்று அவரிடம் கேட்கப்பட்டது. "சில சமயங்களில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வுகளுக்கு வருகிறார்கள், அதனால் பிரச்சனைகள் ஏற்படலாம், எனவே தான் இவ்வாறு செய்ய அறிவுறுத்தியுள்ளோம்" என்று அவர் விளக்கினார்.
"தேவைப்பட்டால் உங்கள் ஆதார் அட்டையை கூட மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் இந்துவாக இருந்தால், பசுவின் மூத்திரத்தைக் குடிப்பதைப் பொருட்படுத்த மாட்டீர்கள். குறிப்பாக கார்பா பந்தல் என்ற விசேஷமான இடத்திற்குச் செல்லும் முன்பு நிச்சயம் குடிப்பார்கள். அதை மறுக்கும் பேச்சுக்கே இடமில்லை" என்று அவர் மேலும் கூறினார். பாஜக தலைவர் சிந்து வர்மாவின் இந்த கருத்து ஏற்புடையது இல்லை என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதனை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீலப் சுக்லா கூறுகையில், பாஜக தலைவர்கள் பசுக் காப்பகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கவனிக்காமல் மௌனமாக உள்ளனர்.
ஆனால் இது போன்ற ஒரு சூழ்நிலையை அரசியலுக்கு பயன்படுத்த முயற்சிக்கின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார். அரசியலில் மக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறது என்று நீல் சுக்லா கூறினார். கார்பா பந்தல்களுக்குள் செல்லும் முன் பாஜக தலைவர்கள் மாட்டு மூத்திரத்தைக் குடிக்க வேண்டும் என்றும், அதை வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ