ராம் கோவில் கட்டாவிட்டால் BJP மீது மக்கள் நம்பிக்கை இழக்கும்: ராம்தேவ்
அயோத்தியில் ராம் கோவில் கட்டப்படவில்லை என்றால் பா.ஜ.க. மீது உள்ள நம்பிக்கையை மக்கள் இழபார்கள் என பதஞ்சலி நிறுவனத்தலைவர் ராம்தேவ் தெரிவித்துள்ளார்!
அயோத்தியில் ராம் கோவில் கட்டப்படவில்லை என்றால் பா.ஜ.க. மீது உள்ள நம்பிக்கையை மக்கள் இழபார்கள் என பதஞ்சலி நிறுவனத்தலைவர் ராம்தேவ் தெரிவித்துள்ளார்!
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவில்லை என்றால், பா.ஜ.க. மீது விசுவாசத்தை மக்கள் இழந்துவிடுவார்கள் என்று யோக குரு குரு ராம்தேவ் ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
குஜராத் மாநிலத்தில் முதலாவது பதஞ்சலி அங்காடி நேற்று அகமதாபாத்தில் பாபா ராம்தேவ் திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பதஞ்சலி நிறுவனத்தலைவர் ராம்தேவ்; "அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாமாகவே கோவிலை கட்டி முடிப்பது. மற்றொன்று ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்தில் இதற்கென தனி சட்டத்தை இயற்றி நிறைவேற்றி அரசு கோவிலை கட்டுவது.
ஒருவேளை மக்களாகவே முடிவெடுத்து கோவிலை கட்டினால் அது நீதிமன்றம் மற்றும் சட்டத்தை அவமதிப்பதாக மாறிவிடும். மேலும், இந்த விவாகரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு இருந்து வருகிறது. நீதிமன்றமும் வழக்கை தாமதப்படுத்தி வருகிறது.
இதனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவசர சட்டத்தை இயற்றி அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும். அப்படி செய்யாத பட்சத்தில் மக்களின் நம்பிக்கையை பா.ஜ.க இழக்கும்" என்று எச்சரித்துள்ளார்.
மேலும், "ஜனநாயகத்தில், பாராளுமன்றம் நீதிக்கான மிக உயர்ந்த கோவில் ஆகும், மற்றும் (நரேந்திரா) மோடி அரசாங்கம் ஒரு கட்டளை ஒன்றை (ராம் கோயிலின் கட்டுமானத்தை உருவாக்க முடியும்)," என்று அவர் கூறினார்.