குஜராத் விவசாயிகளுக்கு செக் வைத்த Lay’s chips நிறுவனம்...
Lay’s chips(லேஸ் சிப்ஸ்) தயாரிக்கப் பயன்படுத்தப்படும் காப்பீடு பாதுகாப்பு பெறப்பட்டுள்ள உருளைக்கிழங்கை அனுமதியின்றி பயிரிட்டதாக குஜராத் விவசாயிகளிடம் அந்நிறுவனம் இழப்பீடு கோரியுள்ளது.
Lay’s chips(லேஸ் சிப்ஸ்) தயாரிக்கப் பயன்படுத்தப்படும் காப்பீடு பாதுகாப்பு பெறப்பட்டுள்ள உருளைக்கிழங்கை அனுமதியின்றி பயிரிட்டதாக குஜராத் விவசாயிகளிடம் அந்நிறுவனம் இழப்பீடு கோரியுள்ளது.
Lay’s chips(லேஸ் சிப்ஸ்) தயாரிக்க FC5 எனப்படும் உருளை வகை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உருளை வகைக்கு Lay’s chips(லேஸ் சிப்ஸ்) தயாரிப்பு நிறுவனமான PepsiCo காப்பீடு பெற்றுள்ளது. இந்த வகை உருளை கிழங்கினை குஜராத் விவசாயிகள் நான்கு பேர் அனுமதி இன்றி பயிரிட்டதாகவும், பயிரிட்ட குஜராத் விவசாயிகள் இழப்பீடு தரவேண்டும் அல்லது தங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என PepsiCo நிறுவனம் அஹமதாபாத் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.
அனுமதியின்றி உருளைக்கிழங்கு பயிரிட்ட விவசாயிகள் ரூ. 1.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று அகமதாபாத் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
வழக்கின் விசாரணையின் போது, PepsiCo நிறுவனம் "விவசாயிகள், ஏற்கனவே பயிரிட்ட உருளைக்கிழங்குகளை PepsiCo நிறுவனத்திடம் ஒப்படைத்து விடவேண்டும். அதுமட்டுமின்றி, PepsiCo நிறுவனத்தோடு இணைந்து பணியாற்ற வேண்டும். காப்புரிமை பெற்ற விதைகளை வாங்கி, உருளைக்கிழங்குகளை பயிரிட்டு கொடுக்க வேண்டும். ஏற்கனவே ஆயிரக்கணக்கில் விவசாயிகள் எங்களுக்காக பணியாற்றுகின்றனர். இதை செய்யமுடியவில்லை என்றால் எங்களது காப்புரிமை பெற்ற விதைகளை பயிரிடமாட்டோம் என்று கையெழுத்திட்டு கொடுங்கள். நீங்கள் வேறு ரக உருளைக்கிழங்குகளைப் பயிரிட்டுக்கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும், எனவே அதற்கு கால அவகாசம் வேண்டும் என்று விவசாயிகள் தரப்பு கேட்கடுள்ளது. இதனையடுத்து வழக்கு ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.