04:49 PM | 10/30/2019


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்திற்கு நவம்பர் 13 வரை நீதிமன்றக் காவல்...



ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக இடைக்கால ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு..!!


ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் 14 நாட்கள் சிபிஐ காவலில் இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் திகார் சிறையில் இருந்தார். தற்போது, ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கஸ்டடியில் இருந்து வருகிறார். அவருக்கு சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் இருப்பதால் வீட்டு உணவு வழங்க அனுமதி கோரினார். ஆனால் நீதிமன்றமோ ஒரு வேளை மட்டுமே வீட்டு உணவு வழங்க அனுமதி வழங்கியது.


இதனால் சிறை உணவு அவருக்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து அவர் உடல் உபாதை காரணமாக அக்டோபர் 7, 23, 25, 28 ஆகிய தேதிகளில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் ஹைதராபாத்தில் சிகிச்சை மேற்கொள்ள 2 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்குமாறு கடந்த 24-ஆம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். எனினும் நீதிமன்றமோ அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிட்டது.


குடல் அழற்சியால் கடந்த 2 மாதத்தில் சுமார் 7.5 கிலோ வரை அவரது உடல் எடை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறைக்குச் செல்லும்போது 73.5 கிலோ இருந்த சிதம்பரம், தற்போது 66 கிலோ எடையுடன் மிகவும் உடல் நலிவுற்று பலவீனமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு குடல் அழற்சி நோயால் வாய் முதல் குடல் வரை கடுமையான புண், வயிறு வலி, எடை குறைதல் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டு தொடர் பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


இந்நிலையில், அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக இடைக்கால ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தக்கல செய்துள்ளார். மேலும், உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.