இன்று இரவு முதல் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்கலாம்! ALERT
Petrol-Diesel Prices: இந்தியாவில் எண்ணெய் விலை ஏறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இன்று இரவு முதல் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.`
புதுடெல்லி: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று 12வது நாளாக நடைபெற்று வரும் இந்த போரின் தாக்கம் முதல் நாளிலேயே உலக அளவில் தெரிந்தது. பங்குச் சந்தை முதல் பில்லியன் சந்தை வரை உள்ள முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர். உலகளவில் கச்சா எண்ணெய் வரலாறு காணாத உயர்வால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனுடன், கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்து வருகிறது.
இன்று இரவு முதல் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்கலாம்:
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக பேராசிரியர் சுதிர் பிஷ்ட் கூறுகையில், ரஷ்யா உலகின் 12% கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கிறது என்றும், உலகளவில் பெட்ரோல் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்றும் கூறினார். அதனால் இந்தியாவில் எண்ணெய் விலை ஏறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இன்று இரவு முதல் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
மத்திய அரசு கலால் வரியை குறைக்க வாய்ப்பு:
மறுபுறம், அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மூன்று முதல் நான்கு ரூபாய் வரை குறைக்கலாம் எனத் தெரிகிறது.
மேலும் படிக்க: பெட்ரோல் பங்கில் மோசடி: பெட்ரோலில் தண்ணீர் கலப்படம், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.10-16 வரை விலை அதிகரிக்கலாம்:
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் குறிப்பாக எரிவாயுவைச் சார்ந்திருப்பதால் ஐரோப்பாவில் மோசமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்பி உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்தால், இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.16 வரை அதிகரிக்கலாம். அதே சமயம் டீசல் லிட்டருக்கு ரூ.8 முதல் 12 வரை அதிகரிக்கலாம்.
கச்சா எண்ணெய் விலை மேலும் உயரலாம்:
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 139 டாலரை எட்டியுள்ளது. இது கச்சா எண்ணெய்க்கு கிட்டத்தட்ட 14 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும். உலகளவில் விநியோகம் குறைந்ததாலும், மேலும் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தாலும் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 1 மாதத்தில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும்.
கடந்த 120 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை:
கடந்த 120 நாட்களாக நாட்டில் பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு இல்லை. இந்த நேரத்தில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து இரண்டு மாதங்களில் இல்லாத உச்ச அளவை எட்டியுள்ளது. திங்கட்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 76.92 ஆக சரிந்தது. இதற்குப் பிறகு ஒரு முறை 76.96 என்ற குறைந்த அளவை எட்டியது.
மேலும் படிக்க: வரும் நாட்களில் PUC சான்றிதழ் இல்லை என்றால் பெட்ரோல் கிடையாது!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR