இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (செப்டம்பர் 17) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சவூதியில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடும் உயர்வை அடைந்துள்ளது. இதனால் இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவுக்கு எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படாது என அரம்கோ நிறுவனம் உறுதி அளித்துள்ளதாக இந்திய எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இன்று சென்னையில் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.74.99 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.69.31 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றன.