பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வால் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது என முன்னால் மத்திய அமைசார் ப.சிதம்பரம் கூறி உள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல், டீசல் உயர்வு குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டியில் கூறும்போது,,!


பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வு மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.மக்கள் அன்றாட தேவைக்கு எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்பதை அரசு தீர்மானிக்க கூடாது என்றார். 


தொடர்ந்து பேசிய அவர், 2014 மே - ஜூன் மாதத்திற்கு பிறகு எவ்வித காரணமும் இன்றி விலை உயர்த்தப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பால் நாட்டின் பொருளாதாரம் நலிந்துள்ளது. இது வாடிக்கையாளர்களை கசக்கி பிழியும் நடவடிக்கையே அன்றி வேறு ஒன்றும் இல்லை. இணைச் செயலாளர் பதவி நியமனம் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. 



 


ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல் -டீசலை கொண்டுவந்தால் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம். கச்சா எண்ணை விலை குறைந்திருந்தாலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.