பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் சாதனை! ஒரே ஆண்டில் கலால் வரி வசூல் ரூ.3.35 லட்சம் கோடி
கடந்த ஆண்டு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசாங்கம் அதிகரித்துள்ளது என்று அமைச்சர் ராமேஸ்வர் டேலி மக்களவையில் தெரிவித்தார். பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ .19.98 லிருந்து ரூ .32.90 ஆக உயர்த்தப்பட்டது. அதேசமயம் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ .15.83 லிருந்து ரூ .11.8 ஆக உயர்த்தப்பட்டது.
ஒருபுறம் சாமானிய மக்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக் காரணமாக பெரிதும் பாதிக்கப்படுகின்றனர், ஆனால் மறுபுறம் அது மத்திய அரசின் பக்கெட்டை நிரப்பியுள்ளது. 2021 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி மூலம் ரூ .3.35 லட்சம் கோடி அரசு ஈட்டயுள்ளது என்று மக்களவையில் மத்திய அரசு கூறியுள்ளது. இதுவரையில் வசூலான தொகையுடன் ஒப்பிடும் போது இது அதிகமாகும். இது ஒரு சாதனை என்றும் கூறலாம்.
கடந்த ஆண்டு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசாங்கம் அதிகரித்துள்ளது என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ராமேஸ்வர் டேலி திங்களன்று மக்களவையில் தெரிவித்தார். பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ .19.98 லிருந்து ரூ .32.90 ஆக உயர்த்தப்பட்டது. அதேசமயம் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ .15.83 லிருந்து ரூ .11.8 ஆக உயர்த்தப்பட்டது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக வீழ்ச்சியடைந்த நேரத்தில் இந்த விலை அதிகரிப்பை மத்திய அரசு மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Fuel vs GST: பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியின் கீழ் வருமா? வந்தால் அதன் தாக்கம் என்ன?
2019-20 உடன் ஒப்பிடும்போது இரு மடங்கு வசூல்:
எண்ணெய் மீதான விலை அதிகரிப்பு காரணமாக, 2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரை பெட்ரோல் மற்றும் டீசலில் இருந்து கலால் வரி வசூல் ரூ .3.35 லட்சம் கோடியாக இருந்தது என்று மத்திய அமைச்சர் கூறினார். இது 2019-20 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட இரு மடங்கு வசூல் ஆகும்.
2019-20ல் பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் கிடைத்த கலால் வரி வசூல் ரூ .1.78 லட்சம் கோடியாக இருந்தது. பொதுமுடக்கம் காரணமாக எண்ணெய் விற்பனையில் ஏற்பட்ட சரிவு இல்லாமல் இறுதிருந்தால், இந்த தொகை அதிகமாக இருந்திருக்கலாம் என்று மத்திய அமைச்சர் கூறினார். பொதுமுடக்கம் காரணமாக, நாடு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்தில் சரிவு ஏற்பட்டது. அதேபோல 2018-19 நிதியாண்டில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வசூல் ரூ .2.13 லட்சம் கோடியாக இருந்தது.
கடந்த மூன்று மாதங்களில் ரூ .94,181 கோடி வசூல்:
மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில், அதாவது 2021 ஏப்ரல் முதல் ஜூன் வரை, கலால் வசூல் ரூ .94,181 கோடியாக உள்ளது என்று கூறினார். பெட்ரோல் மற்றும் டீசல் தவிர, ஏடிஎஃப், இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றின் மீதான கலால் வரியும் இதில் அடங்கும். 2020-21 நிதியாண்டில் மொத்த கலால் வசூல் ரூ .3.89 லட்சம் கோடி.
ALSO READ | World Environment Day: எத்தனால் கலந்த எரிபொருள் திட்டம் குறித்து பிரதமர் அறிவிப்பு
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் என்பது சந்தையைச் சார்ந்தவை என்றும் அவை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களால் தீர்மானிக்கப்படுகின்றன என்றும் டெலி கூறினார்.
பெட்ரோல்-டீசல் லிட்டருக்கு ரூ .100 தாண்டியது:
கடந்த ஆண்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி அதிகரித்தபோது, அது சில்லறை விலையை பாதிக்கவில்லை. இதற்குக் காரணம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் வீழ்ச்சி காரணமாக விலை அதிகரிப்பு பெருசாக தெரியவில்லை. ஆனால் தற்போது தேவை அதிகரித்தவுடன், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பாதிக்கிறது.
நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ .100 தாண்டியுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் டீசல் லிட்டருக்கு ரூ .100 க்கு மேல் கிடைக்கிறது. சரக்கு கட்டணம் மற்றும் உள்ளூர் வாட் வரி காரணமாக மாநிலங்களில் விலைகள் வேறுபடுகின்றன என்று டெலி கூறினார்.
நடப்பு நிதியாண்டில் பெட்ரோல் விலை 39 மடங்கு உயர்ந்தது:
நடப்பு நிதியாண்டில் இதுவரை 2021-22 ஆம் ஆண்டில் பெட்ரோல் விலை 39 மடங்கு மற்றும் டீசல் விலை 36 மடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய அமைச்சர் கூறினார். பெட்ரோல் விலை ஒரு முறை குறைக்கப்பட்டது, டீசலின் விலை இரண்டு முறை குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை கடந்த நிதியாண்டில் 76 மடங்கு உயர்ந்தது. 10 மடங்கு குறைந்துள்ளது. மறுபுறம், டீசல் விலை 73 மடங்கு அதிகரிக்கப்பட்டு 24 மடங்கு குறைந்தது.
ALSO READ | Best CNG Cars: பெட்ரோல் விலை உயர்வில் இந்த கார்கள் சிறந்த தேர்வாக இருக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR