கொரோனா காரணமாக வாகனங்களின் போக்குவரத்து குறைந்துவிட்டது. ஆனால்  பெட்ரோல் டீசல் விலை ஏறிக் கொண்டே போகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல் டீசல் விலைகள் தொடர்ந்து இரு வருடங்களாக அதிகரித்து வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ தொட்டு விடுமோ என்ற அனைவரும் அச்சம் கொள்கின்றனர்.  மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோல்- டீசம் மீது விதிக்கும் வரியை குறைக்காவிட்டால், ஜனவரி மாதம் இந்த லிட்டர் பெட்ரோல் விலை ரூ .100-ஐ தொட்டு விடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் விலை இதன் காரணமாக அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் அக்டோபரில் பீப்பாய் ஒன்றுக்கு $ 35.79 ஆக இருந்தது. இது அதன் சராசரி விலை. நவம்பர் மாதத்திற்குள், விலை உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு $  45.34 டாலருக்கு விற்கத் தொடங்கியது. இப்போது வரவிருக்கும் நாட்களில், இதே போன்று  விலைகள் அதிகரிப்பது தொடர்ந்தால், நிச்சயம் பெட்ரோல் விலை ரூ.100ஐ தொட்டுவிடும்.


கச்சா எண்ணெய் விலைகள் 26 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன. அடுத்த இரண்டு மாதங்களில்  கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 56 டாலர் உயரலாம். பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விட்டது.  வாகன போக்குவரத்தும் அதிகரித்து வருவதால், தேவை மேலும் அதிகரிக்கும். கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 56 டாலரை எட்டினால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ .100 க்கு மேல் செல்லும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.


மத்திய (central Government) அரசு மற்றும் மாநில அரசு விதிக்கும் வரிகள் குறைக்கப்பட்டால், தான் விலை குறையும். கலால் வரி மற்றும் வாட்(VAT) வரி சுமை கணிசமாக அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில், மத்திய அரசு கலால் வரியை இரண்டு முறை அதிகரித்தது. கலால் வரி பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ .17 ஆகவும் டீசலுக்கு ரூ .16 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கலால் வரியை தவிர மாநிலங்கள் வாட் (VAT) வரியை வசூலிக்கின்றன.  பல மாநிலங்களில் வசூலிக்கப்படும் வாட் வரி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது.


ALSO READ | கொரோனா காலத்தில் வேலை இழப்பு, சம்பள குறைப்பு அதிகம் இருந்ததா.. உண்மை என்ன..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR