டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.72.85 ஆக விற்பனையாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் பெட்ரோல் - டீசல் (Petrol - Diesel) விலை உயர்வு குறைவதாகத் தெரியவில்லை. இன்னும் வரவிருக்கும் நாட்களில், எண்ணெய் விலைகளின் உயர்வு மக்கள் பணத்தை சூறையாட உள்ளது. எண்ணெய் விலை குறைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு இல்லை. இதற்கு நேரடி காரணம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. 


உண்மையில் ஈரான் - அமெரிக்க பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவினங்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கச்சா எண்ணெய்க்காக இந்தியா சுமார் 51,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 


அமெரிக்காவிற்கும் ஈராக்கிற்கும் இடையிலான அரங்கேறி வரும் சூடான அறிக்கைகளுக்கு மத்தியில் காலை முதல் கச்சா எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.78.77 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.72.85ஆகவும் உள்ளது. 


டீசல் விலை தொடர்ந்து  உயர்ந்து வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயருமோ? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.