வரும் ஜனவரி 13-ம் தேதி வரை பெட்ரோல் நிலையங்களில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை தொடரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று மாலை பெட்ரோல் நிலையங்களில் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனைக்கு 1 சதவீதம் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும் என வங்கிகள் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. 


இதனால் எண்ணெய் நிறுவனங்கள் எங்களுக்கு கிடைக்கும் லாபத்திலும் பரிவர்த்தனைக் கட்டணத்தை பிடித்தம் செய்துவிட்டால் தொழிலை நடத்த முடியாது. எனவே வங்கிகளின் இந்த அறிவிப்பைக் கண்டித்து ஞாயிறு நள்ளிரவு முதல் பெட்ரோல் நிலையங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை ஏற்றுக்கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளோம் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்தன.


இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் வங்கிகள் 1 சதவீதம் கட்டணம் வசூலிக்கும் முடிவை ஜனவரி 13-ம் தேதி வரை தள்ளிவைப்பதாக அறிவித்த்துள்ளது. எனவே பெட்ரோல் நிலையங்களில் வரும் ஜனவரி 13-ம் தேதி வரை கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வது தொடரும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.