புதுடெல்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதால், முக்கியமாக உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பல நாடுகளில் பங்கு சந்தைகள் கடும் சரிவை கண்டுள்ளது. அதேநேரத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் 17 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சரிந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல், டீசல் விலைகளானது கடந்த ஜூன் 17, 2017 முதல் நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இது ஒவ்வொரு வாரமும் பெட்ரோல், டீசல் விலையை மறுசீரமைக்கும் முந்தைய நடைமுறையிலிருந்து மாற்றம்செய்யப்பட்ட நடைமுறையாகும்.


சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 


அந்தவகையில் டெல்லி அரசு இரண்டு எரிபொருட்களில் உள்ளூர் விற்பனை வரி அல்லது மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) உயர்த்தியதை அடுத்து, தேசிய தலைநகரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .1.67 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ .7.10 ஆகவும் உயர்த்தப்பட்டது.


ALSO READ: டெல்லியில் உயரும் மது விலை.. 70% "சிறப்பு கொரோனா வரி" விதித்த அரசு


டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .71.26 ஆக இருந்தது, முன்பு ரூ .69.59 ஆக இருந்தது. மேலும் டீசல் விலை லிட்டருக்கு ரூ .62.29 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.


இந்நிலையில் டெல்லியிலும் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டுவரி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.67ம், டீசல் விலை லிட்டருக்கு, ரூ.7.10ம் உயர்த்தப்பட்டுள்ளது.


முன்னதாக பெட்ரோல் மீதான வாட் தொகையை 27 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்த்த டெல்லி அரசு எடுத்த முடிவைப் பின்பற்றுகிறது. டீசல் விஷயத்தில், வாட் 16.75 சதவீதத்திலிருந்து கிட்டத்தட்ட 30 சதவீதமாக இரட்டிப்பாகியுள்ளது.