புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை 55 டாலராக உயர்ந்துள்ளதால், இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்த வாய்ப்புள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.


தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 55 டாலராக உயர்ந்துள்ளது. 


சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 


இந்த தடவை விலை உயர்வு சற்று அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.7 ஆகா உயரும் என்று தெரிகிறது.