புதுடெல்லி: பெட்ரோல் பங்க்குகல் மூலம் 2000 ரூபாய் வரை பெற்றுக்கொள்ளும் வசதியை மத்திய அரசு நேற்று இரவு அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று முதல் பெட்ரோல் பங்க்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி 2000 ரூபாய் வரை பெற்று கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என்று அறிவித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் வங்கிகளிலும், ஏ.டி.எம்.,களிலும் கூட்டம் அலைமோதுகிறது. வங்கிகளும், போஸ்ட் ஆபிஸ்களும் மக்களிடம் உள்ள பணத்தை மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் கறுப்பு பணத்தை மாற்றாமல் இருக்கவும் நிதியமைச்சகம் பண மாற்றத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.


டெபிட் கார்டுகளை தேய்த்து, பணம் செலுத்த பயன்படுத்தும் பி.ஓ.எஸ். கருவி மூலம் இந்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம். பாரத ஸ்டேட் வங்கியின் பி.ஓ.எஸ். கருவியை வைத்துள்ள 2,500 பெட்ரோல் பங்க்குகளில் இந்த வசதி அமலுக்கு வருகிறது.  பி.ஓ.எஸ். கருவியில் டெபிட் கார்டை தேய்த்து, ஒரு நாளில் ஒரு நபர் 2000 ரூபாய் வரை பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அதிகாரி தெரிவித்தார்.