பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப் படாதது ஏன்... மத்திய அமைச்சர் கூறுவது என்ன!
கடந்த நாட்களில் அனைத்து ஊடக அறிக்கைகளிலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை விரைவில் லிட்டருக்கு 2 ரூபாய் வரை குறைக்கப்படும் என்றும், அது பல்வேறு கட்டங்களாக அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
பெட்ரோல்-டீசல் விலை: கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லை. கச்சா எண்ணெய் விலையும் வரலாறு காணாத அளவில் சரிந்தாலும், உள்நாட்டு சந்தையில் பெட்ரோல், டீசலில் எந்த மாற்றமும் இல்லை. நவம்பர் 1ம் தேதி முதல் எண்ணெய் விலை லிட்டருக்கு 40 காசுகள் வரை குறைக்கப்படும் என்று கடந்த சில நாட்களாக அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. பெட்ரோல் மற்றும் டீசல் விலை விரைவில் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படும் என்றும், அது பல்வேறு கட்டங்களாக அமல்படுத்தப்படும் என்றும் சில ஆதாரங்கள் கூறுகின்றன. ஆனால் நவம்பர் 1ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ரஷ்யா-உக்ரைன் போரினால் உண்டாகியுள்ள பாதிப்பு
பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இது குறித்து கூறுகையில், பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் டீசலில் லிட்டருக்கு 4 ரூபாய் நஷ்டம் அடைந்து வருகின்றன. பெட்ரோல் விற்பனையில் தற்போது நிறுவனங்களின் சிறிதளவு இலாபம் ஈட்டி வருவதாகவும் அவர் கூறினார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் இருப்பது ஏன் என்பது குறித்து பூரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ரஷ்யா-உக்ரைன் போரினால் நாட்டின் எண்ணெய் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும் படிக்க | மாதத்தின் முதல் நாளே இப்படியா? பெட்ரோல், டீசல் விலை குறித்த பெரிய அப்டேட்!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் HPCL) ஆகிய மூன்று சில்லறை எரிபொருள் விற்பனையாளர்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு தனது அமைச்சகம் உதவி கோரும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார். ரஷ்யா உக்ரைன் போர் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயை மிகவும் விலை உயர்ந்த போது, இந்த நிறுவனங்கள், பணவீக்கத்தை சமாளிக்க அரசாங்கத்திற்கு உதவ பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
விலை குறைப்பு குறித்து கேட்டபோது, “ எரிபொருள் விற்பனை நிறுவனங்களுக்கு (OMC) இன்னும் டீசல் விற்பனையில் நஷ்டம்தான்” என்றார். தற்போது, டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.3-4 இழப்பு ஏற்படுகிறது. மூன்று எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களும் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.19,000 கோடிக்கு மேல் நிகர இழப்பைச் சந்தித்துள்ளனர். இந்த நிறுவனங்களும் செப்டம்பர் மாதம் தொடங்கும் காலாண்டில் நஷ்டத்தை சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
மேலும் படிக்க | Crude Oil Price: அதிகரித்தது க்ரூட் ஆயில் விலைகள்! பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ