Lucky Zodiac Signs of November 2024: கிரகங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ராசிகளுக்கான மாத பலன் கணிக்கப்படுகிறது. மாத கிரக பெயர்ச்சிகளின் காரணமாக, நவம்பர் மாதம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமானதாக இருக்கும். அதே சமயம் சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரையிலான கால கட்டத்தில், மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம்.
மேஷம்: சிக்கலைத் தீர்ப்பதற்கான புதிய உத்திகள் மற்றும் அணுகுமுறைகளை உருவாக்குவதில் வெற்றி பெறுவீர்கள். நிர்வாகத்திற்கு புதிய யோசனைகள் மற்றும் கருத்துக்களை முன்வைக்கும் வாய்ப்புகள் உண்டாகும். உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் செயல்களில் ஈடுபட நீங்கள் விரும்பலாம். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
ரிஷபம்: உங்கள் நிதி நிலைமை மற்றும் நல்வாழ்வை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து தீவிரமாக யோசிப்பீர்கள். வாழ்க்கையில் பல மாற்றங்களைக் காண்பீர்கள். உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் ரிஸ்குகளை எடுக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
மிதுனம்: உங்களின் தலைமைத்துவ குணங்கள் மற்றும் உத்திகள் பணியிடத்தில் நேர்மறையான தொடர்புகளை ஏற்படுத்தலாம். இது சிறந்த உறவுகளுக்கு வழிவகுக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். ஆனால், செலவுகள் அதிகரிக்கும். எனவே, கவனமாக செலவு செய்யவும்.
கடகம்: நவம்பர் மாதத்தில், உடல்நலம் சிறப்பாக இருக்கும்.. தனிமையில் இருப்பவர்கள் சமூக நிகழ்வுகளில் அல்லது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக ஒருவரைச் சந்திக்கலாம். வேலை தேடுபவர்கள் கல்வி, வெளியீடு, சுற்றுலா அல்லது சர்வதேச வர்த்தகத்தில் வாய்ப்புகளைக் காணலாம். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.
சிம்மம்: புதிய திறன்களை வளர்த்துக் கொள்வீர்கள். வேலை தொடர்பான பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகள் மற்றும் அணுகுமுறைகளைக் கண்டறிய அது உதவும். முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரமாக இருக்கலாம். தனிமையில் இருப்பவர்கள் பயணத்தின் போது அல்லது கலாச்சார நிகழ்வுகளில் தங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணையை சந்திக்கலாம்.
கன்னி: நவம்பர் தனிப்பட்ட வளர்ச்சிக்கான மாதமாக இருக்கும். வேலையில், அதிக பொறுப்புகள் வந்தடையும். இதனால், வருமானமும் உயரும். உங்கள் திட்டங்களை, குறிப்பாக உடல்நலம் மற்றும் சொத்து தொடர்பானவற்றை மறுபரிசீலனை செய்வதற்கும் மாற்றங்களைச் செய்வதற்கும் இது ஒரு நல்ல நேரம்.
துலாம்: எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பங்குச்சந்தை சில ஏற்ற இறக்கங்களை சந்திக்கலாம். எனவே, நிபுணர் ஆலோசனையுடன் முதலீடு செய்வது புத்திசாலித்தனம்.
விருச்சிகம் : நவம்பர் மாதத்தில் கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் கார் வாங்க திட்டமிட்டிருந்தால், இதுவே சரியான நேரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.
தனுசு: வேலை மற்றும் தொழில் ரீதியாக, நவம்பர் மாதம் முன்னேற்றம் மற்றும் விஷயங்களைத் தீர்ப்பதற்கு ஒரு நல்ல மாதம். வேலை நுட்பங்களை மேம்படுத்தும் பணிகளைச் சமாளிப்பதில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியத்தின் பார்வையில், செரிமானத்தை கண்காணிக்க வேண்டும்.
மகரம்: நிமித்தமான பயணம் ஏற்படும். பழைய சிந்தனைகள் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். மன அழுத்தத்தை சமாளிக்க, யோகா, தியான பயிற்சியில் ஈடுபடவும். உங்கள் திறபதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கேட்க இதுவே சரியான நேரம்.
கும்பம் : உங்கள் தர்க்கரீதியான சிந்தனையுடன் உங்கள் திறமையும் பணியிடத்தில் உங்களுக்கு பாரட்டை பெற்றுத் தரும். உங்கள் புதுமையான யோசனையால் நிறுவனம் நல்ல லாபம் ஈட்ட முடியும். நீண்ட கால முதலீட்டுத் திட்டம் பலன் பெறும்.
மீனம்: இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் மீது கவனம் செலுத்த வேண்டிய நேரம். பண விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை. உணர்ச்சிவசப்படும்படியான சூழல் அமையலாம். ணியிடத்தில் சவால்கள் இருக்கலாம். முக்கிய நிதி முடிவுகளை எடுக்க அல்லது ஆபத்தான வாய்ப்புகளில் முதலீடு செய்ய இது சிறந்த நேரம் அல்ல.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.