சபரிமலை ஐயப்பன் கோவில் சந்நிதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். மேலும் கோவில் முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்படும். 


இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் பகுதிகளில் செல்போன் மூலம் எடுக்கப்பட்ட படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோவில் சந்நிதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதனை அறிவித்துள்ள தேவசம் போர்டு பக்தர்கள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.