Air India Express crash: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ .10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ .10 லட்சம் வழங்கப்படும் கேரளா முதல்வர் அறிவித்துள்ளார்.
Air India Express crash: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க கேரள அரசு (Kerala Govt) அறிவித்துள்ளது. இந்த விமான விபத்தில் இதுவரை 18 பேர் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (சனிக்கிழமை) அறிவித்தார்.
துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 190 பேருடன் கோழிக்கோடு (Kozhikode Airport) விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களில் ஒவ்வொரு பயணிகளின் குடும்பங்களுக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன் (Pinarayi Vijayan) ரூ .10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என கேரள முதல்வர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது.
இது தவிர, விபத்தில் பலியானவர்கள் உட்பட அனைவருக்கும் கோவிட் சோதனை (Coronavirus Test) நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவரை மேற்கொண்ட கொரோனா சோதனையில் ஒருவருக்கு மட்டுமே தொற்று உறுதியாகி உள்ளது.
ALSO READ | Air Asia விமானம் மீது பறவை மோதியது; அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு; பயணிகள் நலம்
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கபடும் மற்றும் இந்த துரதிர்ஷ்டவசமான விமான விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் அவர்கள் எந்த மருத்துவமனையில் இருந்தாலும் அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான செலவுகளை மாநில அரசு ஏற்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் (Chief Minister of Kerala) தெரிவித்தார்.
முன்னதாக, அங்குள்ள கோழிக்கோடு (Kozhikode Airport) விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூ .10 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சனிக்கிழமை அறிவித்தார். சிறு காயமடைந்தவர்களுக்கு தலா ரூ .2 லட்சம் மற்றும் ரூ .50 ஆயிரம் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும்.
ALSO READ | Air India Plane crash: ஏர் இந்தியா விமானம் விபத்து.. நடந்தது என்ன?
வலுவான காற்று, மோசமான வானிலை, தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வழுக்கும் ஓடுபாதை மற்றும் வழக்கமான இடத்திற்கு அப்பால் விமானம் தரையிறங்கியது என அனைத்தும், இந்த ஆபத்தான வுபத்து ஏற்படக் காரணமாக இருக்கக்கூடும் என்று விமான வல்லுநர்கள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 190 பேருடன் கோழிக்கோடு (Kozhikode Airport) விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதை தாண்டி அருகில் இருந்த 35 அடி பள்ளத்தில் வீழ்ந்தது. இந்த சம்பவத்தில் இரண்டு துண்டுகளாக விமானம் உடைந்து குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர்.
ALSO READ | Air India Plane crash: மிகுந்த வலி.. அனைத்து உதவிகளையும் வழங்கப்படும் -பிரதமர் மோடி