10:25 PM 8/7/2020
கேரளா கோழிக்கோடு விமான விபத்தில் 14 பேர் இறந்தனர், 123 பேர் காயமடைந்தனர் மற்றும் 15 பேர் பலத்த காயமடைந்தனர் என மலப்புரம் எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
14 dead, 123 injured and 15 seriously injured in Kozhikode plane crash incident at Karipur Airport: Malappuram SP to ANI. #Kerala pic.twitter.com/QfFZxHDkVx
— ANI (@ANI) August 7, 2020
10:00 PM 8/7/2020
கேரளா கோழிக்கோடு கலெக்டர்: விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் (IX 1344) அயணித்த பயணிகளின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தார் பின்வரும் ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் - 0495 - 2376901
Relatives of passengers onboard Air India Express Flight (IX 1344) that crashed at Karipur International Airport, can contact the following Helpline Number for enquiries - 0495 - 2376901: Kozhikode Collector. #Kerala https://t.co/8pz0Z00FYu
— ANI (@ANI) August 7, 2020
9:42 PM 8/7/2020
இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டு மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்திய தூதர் பவன் கபூர் கூறியுள்ளார்.
Distressed to learn of this accident. Our thoughts and prayers are with the passengers and their families: Pavan Kapoor, Ambassador of India to the United Arab Emirates
(UAE) https://t.co/Iz8bdLXLEL— ANI (@ANI) August 7, 2020
9:35 PM 8/7/2020
ஏர் இந்தியா நிறுவனம் விமான விபத்து: துபாய் இந்திய துணைத் தூதரகம் வெளியிட்ட ஹெல்ப்லைன்ஸ் எண்கள்- 056 546 3903, 0543090572, 0543090572, 0543090575
Air India Express Flight No IX 1344 from Dubai to Calicut skidded off the runway. We will keep you updated as and when we receive further updates. Our helplines - 056 546 3903, 0543090572, 0543090572, 0543090575: Consulate General of India, Dubai. pic.twitter.com/stXjtsHMKH
— ANI (@ANI) August 7, 2020
9:15 PM 8/7/2020
கோழிக்கோட்டில் உள்ள கரிபூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 30 அடி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
#UPDATE Teams of National Disaster Response Force (NDRF) are being rushed to Karipur Airport where the Dubai-Kozhikode flight skidded off the runway, for search & rescue: NDRF Director General SN Pradhan https://t.co/XbEAw2GA4o
— ANI (@ANI) August 7, 2020
9:14 PM 8/7/2020
கோழிக்கோடு விமான நிலையம் மங்களூரு போன்ற ஒரு டேபிள் டாப் (Tabletop) விமான நிலையமாகும். உள்ளூர் எம்.எல்.ஏ இப்ராஹிம் கூறுகையில், பல பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக விமானத்தில் தீ பிடிக்கவில்லை எனக் கூறினார்.
9:13 PM 8/7/2020
இப்பகுதியில் அதிக மழை பெய்த நிலையில் இந்த சம்பவம் இரவு 7:38 மணியளவில் நடந்துள்ளது. விமானத்தில் பணியாளர்கள் உட்பட 191 பயணிகள் இருந்தனர்.
9:12 PM 8/7/2020
இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல 40 பயணிகள் காயமடைவதாக நம்பப்படுகிறது என்று ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கேரளா: துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த விமானம் ரன்வீயில் இருந்து விலகி சென்று பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்களும் தீயணைப்பு வாகனங்களும் விரைந்துள்ளன.
துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த விமானத்தில் 191 பயணிகள் இருந்ததாகவும், வழியிறங்கும் போதும தனது ஓடுபாதையில் இருந்து விலகி, அருகில் இருந்த பலல்த்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் விமான ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியானார். இரண்டு விமானிகள் உட்பட 6 பணியாளர்கள் விமானத்தில் இருந்தனர்.
மேலும் விமானத்தின் முன் பகுதி பிளவுபட்டு பயங்கரமாக சேதமமாகி உள்ளது. ஏராளமான பயணிகள் காயமடைந்தனர். பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இறப்பு குறித்து எந்த தகவலும் இல்லை.