மருத்துவ சிகிச்சைக்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் அமெரிக்கா புறப்பட்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவில் உள்ள மேயோ கிளினிக்கில் சிகிச்சை பெறுவதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். 


13 நாள் பயணமாக அமெரிக்கா செல்லும் அவர் மருத்து சிகிக்கை குறித்தும், அறுவை சிகிச்சைக்கான சாத்தியகூறு குறித்தும் மருத்துவர்களிடன் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னதாக ஆகஸ்ட் 19-ஆம் நாள் இந்தியாவில் இருந்து அமெரிக்க புறப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பாதிப்பினால் இந்த பயணம் குறித்த திட்டம் தள்ளி போடப்பட்டது. 


இந்நிலையில் தற்போது கேரளாவில் தற்போது இயல்பு நிலை திறும்பி வரும் நிலையில் மருத்துவ சிகிச்சை பெற அமெரிக்க சென்றுள்ளார். இப்பயணத்தில் இவருடன் இவரது மனைவி கமலா விஜயன் இணைந்துள்ளார். சிகிச்சைக்கு பின்னர் இம்மாத இறுதியில் பினராயி அவர்கள் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


73 வயது ஆகும் பினராயி விஜயன் அவர்கள் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 3-ஆம் நாள் வருடாந்திர மருத்துவ பரிசோதனை செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது!