40-வயது பெண்களை சபரிமலையில் அனுமதித்த விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன் சதி செய்துள்ளார் எனவும், கேரள முதல்வர் பதிவியில் இருந்து அவர் விலக வேண்டும் எனவும் பாஜக மூத்த தலைவர் H தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் 48 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முடிவு செய்தது. மேலும் இம்மாதம் 22-ஆம் நாள் முதல் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.


இதற்கிடையில் வரும் ஜனவரி 14-ஆம் நாள் மகரஜோதி தரிசனம் நடைபெறுவுள்ள நிலையில் கடந்த டிசம்பர் 30-ஆம் நாள் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டது. வரும் ஜனவரி 19-ஆம் நாள் வரை நடை திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.


மகர விளக்கு பூஜைக்காக தற்போது சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரண்டு பெண்கள் செய்திதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. நேற்று காலை சுமார் 3.45 மணிக்கு அவர்கள் தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


உச்சநீதிமன்ற தீர்ப்பினை கடைப்பிடிக்க காவலர்கள் செயல்பட்டதாகவும், அதோப்போல் கோவில் வரும் பெண்களை தடுக்க முடியாது என தேவஸ்தான அமைப்பும் இவ்விவகாரம் குறித்து தெரவித்துள்ள நிலையில், சபரிமலை சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து கேரளாவில் பாஜக-வினர், இந்து அமைப்பினர் ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.


இந்நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவர் H ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...



"திருட்டுத்தனமாக 2 மாவோயிஸ்ட் ஒளித்து வைத்து காலை 3.45-க்கு காவல்துறையிலுள்ள தன் கையாட்கள் மூலமாக சபரிமலையின் புனிதத்தை கெடுத்திட சதி செய்துள்ள பினராயி விஜயன் தக்க முறையில் தண்டிக்கப்படுவார். 


இவர் ஒரு இந்து விரோத சதிகாரர். முதல்வராக இருக்க தகுதியற்றவர்." என பதிவிட்டுள்ளார். சர்ச்சையான கருத்துகளுக்கு பிரபலமான ராஜா அவர்கள் தற்போது சபரிமலை விவகாரத்தில் கேரளா முதல்வரை எதிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.