கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய திராவிட முன்னேற்ற கழகத்திற்கு நன்றி தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் நன்றி கடிதம் எழுதியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில வாரங்களுக்கு முன்னதக கேரளாவை சிதைத்து சென்ற கன மழை காரணமாக கேரளாவின் பலபகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த வெள்ளத்தில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். 


மழை வெள்ளத்தால் தவித்த கேரள மக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து உதவி கரங்கள் நீட்டப்பட்டது. இதனையடுத்து திமுக கட்சி MLA, MP-கள் தங்களது ஒருமாத சம்பளத்தினை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அளித்தனர்.


இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.


இக்கடிதத்தில் "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 1 கோடியை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்தீர்கள். அத்துடன் அத்தியாவசிய பொருட்களையும் அனுப்பி வைத்தீர்கள், உங்களுக்கு கேரள மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  



நாங்கள் துயரங்களையும், பேரழிவுகளை சந்தித்த போது, தமிழக மக்கள் நிறைய உதவிகளை செய்தார்கள், குறிப்பாக உங்கள் கட்சியினர் (திராவிட முன்னேற்ற கழகம்) பல உதவிகளை வழங்கியுள்ளனர். பேரழிவு காலத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது"  என குறிப்பிட்டுள்ளார்.