ரயில்வே துறையில் ஊழல் அதிகாரிகளை 'களை ' எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கான களப்பணிகளை துவங்கி விட்தாகவும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், செய்தியாளர்களிடன் தெரிவிக்கையில்., மத்திய அரசு 2 வது முறை பொறுப்பேற்ற பின்னர் , ஊழலை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்கு உதாரணமாக மத்திய நிதி மற்றும் வரித்துறையில் ஆணையர்கள் பொறுப்பில் உள்ள 15-க்கும் மேற்பட்டவர்கள் கட்டாய ஓய்வில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


ஓய்வு பெற உத்தரவிடப்பட்ட அதிகாரிகள்:


1. டாக்டர் அனுப் ஸ்ரீவாஸ்தவா, முதன்மை ஆணையர்
2. அதுல் தீட்சித், ஆணையர்
3. சன்சார் சந்த், ஆணையர்
4. ஜி ஸ்ரீ ஹர்ஷா, கமிஷனர்
5. வினய் பிரிஜ் சிங், ஆணையர்
6. அசோக் ஆர் மஹிதா, கூடுதல் ஆணையர்
7. வீரேந்திரக் அகர்வால், கூடுதல் ஆணையர்
8. அம்ரேஷ் ஜெயின், துணை ஆணையர்
9. நலின் குமார், இணை ஆணையர்
10. எஸ் எஸ் பபனா, உதவி ஆணையர்
11. எஸ் எஸ் பிஷ்ட், உதவி ஆணையர்
12. வினோத் கே.ஆர்.சங்கா, உதவி ஆணையர்
13. ராஜு சேகர், கூடுதல் ஆணையர்
14. அசோக் கே.ஆர்.அஸ்வால், துணை ஆணையர்
15. முகமது அல்தாஃப், உதவி ஆணையர்


இது போல் ரயில்வே துறையில் களை எடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.


ஊழல் புரியும் அதிகாரிகள் யார் என கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இது விரைவில் வெளிச்சத்திற்கு வரும் போது பணி விலகல் உத்தரவு பிறப்பிக்கப்படும். இது போன்ற நடவடிக்கைகள் தவறு செய்ய நினைக்கும் மற்றவர்களுக்கும் பாடமாக அமையும் என கோயல் தெரிவித்துள்ளார்.