ஆன்லைனில் பீட்ஸா ஆர்டர் செய்யும் திருட்டுக் கும்பல், அதனை டெலிவரி செய்வதற்காக வருபவரை வழியில் மறித்து பொருட்களை கொள்ளையடிக்கும் திருட்டு கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் பாஸ்ட் புட் உணவுவகைகளின் ஆக்கிரமிப்பு அதிகமாகி வருகிறது. அதிலும் இந்தகால இளைஞர்களுக்கு பீட்ஸா, பர்கர் என்றால் பொது மதுக்கென்று தனி ரசிகர்களும் உண்டு. பீட்ஸா-வுக்கு ஆசைப்பட்டு பீட்ஸா ஆடர் செய்வது போன்று சிலர் திருட்டில் ஈடுபட்டு வைத்துள்ள திருட்டு கும்பலை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


ஆன்லைனில் பீட்ஸா ஆர்டர் செய்வது போன்று ஆன்லைனில் பீட்ஸா ஆடர் செய்து, அதனை டெலிவரி செய்ய வருபவரிடம் பீட்ஸாவை மட்டுமல்லாமல் பணம், பைக் ஆகியவற்றை கொள்ளையடித்து வந்த திருடர்கள் போலீசில் சிக்கியுள்ளனர். பணம், நகை மற்றும் விலைமதிப்பு மிக்க பொருட்கள் ஆகியவை திருடர்களின் குறியாக இருந்துவந்த நிலையில், தற்போது டெல்லியைச் சேர்ந்த திருடர்களுக்கு பீட்ஸா மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. 


பல்வேறு கடைகளில் இருந்து ஃபோன் மூலமாக பீட்ஸா ஆர்டர் செய்யும் திருடர்கள், அதனை தங்களது இடத்திற்கு வர வைக்கின்றனர். பீட்ஸாவை டெலிவரி செய்யும் நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பீட்ஸா மட்டுமல்லாது அவரிடம் உள்ள எல்லா பொருட்களையும் திருடுகின்றனர்.


பீட்ஸா திருட்டு கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் சமீபத்தில் கைது செய்த நிலையில், அவர்களிடமிருந்து டெலிவரி பேக், கிரெடிட் கார்ட் ஸ்வைப்பிங் மெசின், மூன்று செல்ஃபோன்கள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். கைதான மூவரில் ஒருவர், இதற்கு முன்னதாக டெலிவரி மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். அதனால், அதில் உள்ள முன் அனுபவம் திருட்டுக்கு கை கொடுத்துள்ளது.