கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிளாஸ்டிக் அரிசி குறித்த செய்திகள் வெளியாகியது. இந்த பிளாஸ்டிக் அரிசி சீனாவில் தயாரிக்கப்படுகிறது எனவும் செய்திகள் பரவியது. இதுபோன்ற பிளாஸ்டிக் அரிசிகள் தனியாக விற்பனை செய்யப்படுவது கிடையாது. அவை உண்மையான அரிசியுடன் கலக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைத்தொடர்ந்து இந்தியாவில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் நடந்தது என்பதை உறுதிசெய்யும் வகையில் எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையானது பரவலாக இருந்து வந்தது.


இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹால்ட்வானி மார்க்கெட்டில் பிளாஸ்டிக் அரசி விற்பனைக்கு வந்து உள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மார்க்கெட்டில் அரிசி வாங்கி வந்து சமைத்து சாப்பிட்ட மக்கள் உணவின் ருசியில் மாற்றம் தெரிவதை உணர்ந்து உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை தொடங்கி உள்ளது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


இது தொடர்பாக மாவட்ட மாஜிஸ்திரேட் கே கே மிஸ்ரா பேசுகையில்:-


உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழுவானது விசாரிக்கும். இதுதொடர்பாக சோதனையில் ஈடுபடும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.