கேரளாவைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கை இணையர், தங்கள் திருமணத்தை சட்டப்பூர்வமானதாக பதிவுச் செய்யக்கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: கேரளாவில் ஓரினசேர்க்கை திருமணத்தை பதிவு செய்ய ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து மத்திய, மாநில அரசுகளிடம் நீதிபதி கருத்து தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளார்.


கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்தவர் நிகேஷ். நிகேசின் நண்பர் சோனு. ஓரின சேர்க்கையாளர்களான இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தை நடத்தி வைக்க எந்த மதத்தினரும் முன்வரவில்லை. திருமண சடங்குகளையும் யாரும் செய்துவைக்கவில்லை. மேலும் நிகேஷ்- சோனு ஜோடியின் திருமணத்தை பதிவு செய்ய திருமண பதிவு அலுவலரை அணுகிய போது, அவரும் திருமணத்தை பதிவு செய்ய மறுத்து விட்டார். இதையடுத்து நிகேஷ்- சோனு ஜோடி கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.


இது குறித்து, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த நிகேஷ் பீ.பீ (Nikesh PP) மற்றும் சோனு எம்.எஸ் (Sonu MS) ஆகிய ஓரினச்சேர்க்கை இணையர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால், அதை அங்கீகரிக்க, கோவில் நிர்வாகங்கள் மறுத்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.


எனவே, ஓரினச்சேர்க்கை குற்றமில்லை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்மாதிரியாக கொண்டு, தங்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்திட உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இதை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் (Anu Sivaraman), ஓரினச்சேர்க்கை இணையரின் மனு குறித்து பதிலளிக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.