நிர்பயா வழக்கில் அரசியல் செய்ய வேண்டாம்; பாஜகவுக்கு கெஜ்ரிவால் அறிவுரை
டெல்லி கும்பல் கற்பழிப்பு வழக்கில் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானிக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி: 2019 ஜூலை மாதம் உச்சநீதிமன்றத்தால் மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை காலம் தாமதிக்காமல் தூக்கிலிட முடியாததற்கு காரணம் தலைநகரில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் (Aam Aadmi Party) அரசாங்கம் தான் என்று மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி (Smriti Irani) கூறியிருந்தார். இரானியின் குற்றம் சாட்டை அடுத்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) ஒரு வேண்டுகோளுடன் பதிலளித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிந்த் கெஜ்ரிவால், "இதுபோன்ற பிரச்சினையில் அரசியல் செய்யப்படுவதில் எனக்கு வருத்தமாக இருக்கிறது. குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிடப்படுவதை உறுதிசெய்ய மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டாமா? 6 மாதங்களுக்குள் இதுபோன்ற மிருகங்கள் தூக்கிலிடப்படுவதை உறுதிசெய்ய நாம் கைகோர்க்க வேண்டாமா? இது குறித்து அரசியல் செய்ய வேண்டாம். எங்கள் பெண்களுக்கு பாதுகாப்பான நகரத்தை உருவாக்குவோம் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
2012 டிசம்பரில் தேசிய தலைநகரில் 23 வயது துணை மருத்துவ மாணவியை கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தண்டிக்கப்பட்ட நான்கு பேரை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் புதிய மரண வாரண்ட் பிறப்பித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, நேற்று கெஜ்ரிவால், இந்த பிரச்சினையில் அரசியல் செய்யப்படுவது தான் வருத்தப்பட்டதாகக் கூறினார்.
இதற்கு முன்னதாக, 2019 ஜூலை மாதம் உச்சநீதிமன்றத்தால் மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை காலம் தாமதிக்காமல் தூக்கிலிட முடியாததற்கு காரணம் தலைநகரில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் (Aam Aadmi Party) அரசாங்கம் தான் என்று மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி (Smriti Irani) கூறியிருந்தார்.
பாதிக்கப்பட்டவரின் தாய்க்கு சரியான நேரத்தில் நீதி கிடைக்காததற்கு தில்லி அரசு மீது குற்றம் சாட்டி ஸ்ம்ரிதி இரானி “ஆம் ஆத்மி அரசாங்கத்தின் கீழ் வரும் சிறைத் துறை, ஜூலை 2018 இல் மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் ஏன் தூங்கியது? சிறார் பாலியல் பலாத்காரத்தை விடுவித்தபோது அரசாங்கம் ஏன் ரூ.10,000 மற்றும் ஒரு தையல் கிட் கொடுத்தது?” எனக் கேள்விகளை எழுப்பினார்.
நான்கு பேரும் ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிடப்பட இருந்தது. ஆனால் நிர்பயா கற்பழிப்பு வழக்கில் குற்றவாளியான முகேஷ்குமாரின் கருணை மனு அளித்திருந்தார். அந்த மனுவை இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் நிராகரித்தார். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் கருணை மனு அளித்தால், ஜனவரி 22 தேதியை ஒத்திவைக்குமாறு டெல்லி அரசாங்கமும் சிறை நிர்வாகமும் தில்லி உயர்நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
அதன் பிறகு டெல்லி நீதிமன்றம் அனைத்து குற்றவாளிகளுக்கும் எதிராக புதிய மரண உத்தரவு பிறப்பித்து, இந்த நான்கு பேரும் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்படுவார்கள் என அறிவித்தது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.