பாகிஸ்தானிடமிருந்து சிந்து மாகாணம் விடுதலை பெற உதவுமாறு மோடிக்கு அமெரிக்க வாழ் சிந்தி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் ராணுவத்தால் சிந்து சமூகத்தினர் கடுமையான மனித உரிமை மீறளுக்கு உட்படுத்தபடுவதாக சிந்தி ஆர்வலர் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியிடம் சிந்திக்கு உதவவும், பாகிஸ்தானிலிருந்து சுதந்திரம் பெற உதவவும் வலியுறுத்தினார்.


சிந்தி மக்கள் ஹூஸ்டனில் ஒரு செய்தியுடன் இங்கு வந்துள்ளனர். மோடி ஜி காலையில் இங்கு செல்லும் போது, எங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்ற செய்தியுடன் இங்கு வருவோம். மோடி ஜி மற்றும் ஜனாதிபதி டிரம்ப் எங்களுக்கு உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், "என்று சிந்து ஆர்வலர் ஜாபர் ANI இடம் கூறினார்.



அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெறும் ஹவுடி மோடி என்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திரமோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ஒன்றாக ஒரே மேடையில் தோன்றவுள்ளனர்.


இந்த நிகழ்ச்சியில் 50,000 பேர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் வசிக்கும் சிந்தி சமூக மக்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். சிந்து மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் அட்டூழியங்களில் இருந்து தங்களை விடுவிக்க உதவுமாறு, அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடிக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


பாகிஸ்தானில் சிறுபான்மையினர் நசுக்கப்படுவதால், இந்த விவகாரத்தில் மோடியும், டிரம்பும் உதவுவார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசத்திற்கு விடுதலை பெற்றுக் கொடுத்தது போல், சிந்தி மக்கள் விடுதலை பெறுவதற்கு இந்தியாவின் உதவி தேவை என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.